samedi 1 mai 2010

சர்வதேச மே தினம்

உதிரத்தை வியர்வையாகச் சிந்தி உழைத்து மானிட வளர்ச்சிக்கு மாபெரும் பங்காற்றிய உழைப்பாளர்கள் எட்டு மணி நேரம் கொண்ட உழைப்பை தங்களுடைய உரிமையாகப் போராடி பெற்ற நாளே இன்றைய மே தினமாக அனுஸ்டிக்கப்படுகிறது.

பொதுவுடைமைத் தத்துவத்திற்கு பெரும் எதிர்ப்பு காட்டி வரும் ஐக்கிய அமெரிக்காவில் 1086 ஆம் ஆண்டு பில டெல்பியா நகரத்தில் முதன் முதலில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தடுப்பதற்காக அவர்களின் முதலாளி வர்க்கத்தினர் சதி வழக்குப்போட்டனர். இந்த விசாரணாயின் போது தான் தொழிலாளர்க்ளிடம் 19,20 மணித்தியாளங்கள் வேலை வாங்கப்பட்ட விடயம் வெளி வந்தது. இதனை தொடர்ந்து 1820,1830 களில் வேலை நேரத்தை குறைக்க வேண்டுமென பல தொழிற்சங்கங்களும் வேலை நிறுத்தப்போராட்டங்களை நடத்தின.

இதனிலும் பிலடெல்பியா நகரம் இயந்திர தொழிலாளர்கள் சங்கம் தான் உலகின் முதற் தொழிற் சங்கமாக உருவாக்கப்பட்டது. இதன் இரு ஆண்டுகளின் பின்னரே இங்கிலாந்தில் தொழிற்சங்கங்கள் உருவாகி முதன் முதலாக 10 மணி நேர வேலை நாள் என்ற கோரிக்கையை முன்வைத்தது.

1884 இல் கட்டிடம் கட்டும் தொழிலாளர்கள் நடத்திய வேலை நிறுத்தம் அமெரிக்காவில் எட்டு மணி நேர வேலை நேரம் என்ற போராட்டங்கள் வெடித்தது தான் மே தினம் உருவாக காரணமாக இருந்தது. எனலாம்.அக்காலத்தில் தொழிற்சங்கங்கள் அனைத்தும் போர்க் குணமுள்ள ஸ்தாபனமாகவே காணப்ப்ட்டது.1889இல் பரிசில் இந்த ஸ்தாபனத்தின் முதல் மாநாடு நடைபெற்றது. அதிலே மே 1ஆம் திகதி தொழிலாளர் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது. அன்றைய தினமே தொழிலாளர்கள் அனைவருக்கும் தத்தமது நாட்டிற்கேற்ற வகையில் தேவைகளுக்கான ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தொழிற்சங்க வாதிகளின் வளர்ச்சியையும் கோரிக்கைகளையும் சகிக்க முடியாத முதலாளி வர்க்கத்தினர் 1886இன் பிற்பகுதியில் தொழிலாளர்கள் மீது திட்டமிட்டு தாக்குதல்களை மெற்கொண்டனர். இதன் காரணமாக தொழிலாளர்கள் பல இழப்புக்களை சந்தித்ததுடன் பல உயிரிழப்புக்களையும் சந்திக்க நேர்ந்தது. இதனால் சிக்காக்கோ தொழிலாளர் தலைவர்கள் பலர் தூக்கிலிடப்பட்டனர், இரு ஆண்டுகளுக்கு பிறகு 1888 இல் செயிண்ட் லூயிஸ் கூட்டமைப்பு கூடியது. (தற்போது அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு என்று அழைக்கப்படுகின்றது.)

1889 ஆம் ஆண்டு சாமுவேல் கோம்பர்ஸ் தலைமையில் நடந்த அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பின் ,மாநாடு வேலை நிறுத்த இயக்கத்தை முறைப்படுத்துவதில் வெற்றி பெற்றது. வலுவான முறையில் செயற்பட்ட மர வேலை தொழிலாளர் சங்கம் முதலில் வேலை நிறுத்தத்தில் இறங்குவது என்றும் அது வெற்றி பெற்ற பின் ஏனைய சங்கங்கள் இறங்குவது என்றும் முடிவெடுக்கப்பட்டது. இதில் மரவேலை தொழிலாளர் சங்கப் போராட்டம் வெற்றியடைந்தது. அதைத்தொடர்ந்து எல்லா நாடுகளிலும் ,நகரங்களிலும் மக்களின் எட்டு மணி நேர வேலை நேரம் சட்ட பூர்வமாக கோரி அரசாங்கத்திடமும் நிர்வாகத்திடமும் போராட வேண்டும்.

இதையே உலகம் முழுவதும் ஆர்ப்பாட்டமாக நடத்த பரிஸ் மாநாட்டு முடிவுகளை நிறைவேற்றக்கோரியும் இம்மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது.இதன் படியே ஒவ்வொரு வருடமும் மே தினக் கொண்டாட்டங்கள் உலகெங்கும் அரங்கேறி வருகிறது. எமது நாட்டை பொறுத்தவரை மே தினத்தை அனுஸ்டிக்கும் போது எம்மவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் எப்படி எதிர்கொள்ளுகிறார்கள் என்று நோக்குவோமாயின் பொருளாதார, வாழ்வாதார பிரச்சினை வேதனத்தை பார்த்து வாழ்வை மேம்படுத்தல் விலைவாசி உயவை சமாளித்தல் வறுமைக் கோட்டிலிருந்து மீளுதல் பெருந்தோட்டத்ததுறை வாழ்வாதாரம் என்பனவே தற்போதைக்கு மே தின சாராம்சம் எனலாம்.

இவற்றை தீர்க்க வேண்டிய கடமையில் கடப்பாட்டில் இன்றைய மே தின விழாக்கள் , கொண்டாட்டங்கள் , கருத்தரங்குகள் அமைய வேண்டியது காலத்தின் கடப்பாடாகும்.

Aucun commentaire: