mardi 4 mai 2010

தமிழீழத்துக்கு உயிர் கொடுக்கும் முயற்சி

இலங்கையின் அரசியல் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த, விறுவிறுப்பான ஜனாதிபதித்; தேர்தல் ஒன்று அண்மையில் நடந்துமுடிந்துவிட்டது.

கடந்த 30 வருடங்களாக இலங்கையை பேராபத்தில் ஆழ்த்திய பயங்கரவாதத்தின் நிழல் இந்த ஜனாதிபதித் தேர்தல் மூலம் மீண்டும் தோன்றி ஒரு அச்ச நிலையைத் தோற்றுவி;த்துள்ளது.

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான சரத் பொன்சேகா வடக்கிலும் கிழக்கிலும் அதிகப் பெரும்பான்மையைப் பெற்றுள்ளமை அதனை உறுதிப்படுத்துகின்றது.

சரத் பொன்சேகா வெற்றி பெற்றுள்ள மாவட்டங்களை இணைத்துப் பார்த்தால் அங்கு புலிகள் உரிமை கோரிய தமிழ் ஈழத்தைக் காணமுடியும். எனவே இதன் பின்னணியில் ஏதோ ஒரு சதி முயற்சி இருப்பதை உணரலாம்.

எது எப்படியிருப்பினும் புலிகளின் தனிநாட்டுக் கோரிக்கைக்கு இந்தத் தேர்தல் மீண்டும் உயிரளித்துள்ளது என்பதனை சரத் பொன்சேகா வெற்றி பெற்ற மாவட்டங்கள் பறைசாற்றுகின்றன.

இலங்கையில் தமிழ் ஈழத்தை உருவாக்க பாதை வகுக்கும் வெளிநாட்டுச் சக்திகள் முன்னெப்போதும் இல்லாத அளவில் இந்த ஜனாதிபதித் தேர்தலில் பெருமளவில் தமது பங்களிப்பை வழங்கியமையை விசேடமாகக் குறிப்பிவேண்டும்.

இதனால்தான் இலங்கையில் தேசிய அளவில் பெரும் சதி முயற்சிகள் இடம்பெற்றிருக்கலாமென அரசியல் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இவை அனைத்துக்கும் பின்னணிச் சக்தியாக விளங்கியவர்தான் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா.

எதிரணியின் பொது வேட்பாளராக இவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்துப் போட்டியிட்டார். இது பழிவாங்கும் அரசியல் ஆரம்பம் என ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர்.

அரசுக்கு ஆதரவாக இருந்த மக்கள் விடுதலை முன்னணியினர் அரசுக்கு எதிராகச் செயற்பட்டமை, ஒருபோதும் இணையாத இரு துருவங்களான ஐ.தே.க.வும் மக்கள் விடுதலை முன்னணியும் ஜனாதிபதியை வீழ்த்தும் ஒரே நோக்கில் ஒன்றிணைந்தமை போன்ற காரணங்களை முன்வைத்தே ஆய்வாளர்கள் இது பழிவாங்கும் அரசியலின் ஆரம்பம் எனக் குறிப்பிட்டனர்.

தனிநாட்டுக் கோரிக்கைக்கு எதிhப்புத் தெரிவித்துவந்த ம.வி.மு., ஐ.தே.க.வுடன் கைகோர்த்து நாட்டின் ஆட்புல ஒருமைக்கும் இறைமைக்கும் வேட்டு வைத்தது. மீண்டும் ஒரு பயங்கரமான சூழலுக்கு நாட்டை இட்டுச் சென்றது.

இந்தப் பின்னணியில்தான் புலிகள் முன்வைத்த தமிழீழக் கொள்கைக்கு பகிரங்க ஆதரவளித்த தமிழ்;த் தேசிய கூட்டமைப்பும் இவர்களோடு இணைந்துகொண்டது.

தற்போதைய அரசினால் நாட்டில் பயங்கரவாதம் வேறோடு கிள்ளியெறியப்பட்ட பின்னர் தமிழ்;த் தேசிய கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டை தற்காலிகமாக மாற்றி வாலை சுருட்டிக்கொண்டது. எனினும் தாம் சுருட்டிக்கொண்ட வாலை சரத் பொன்சேகாவின் தலைமையில் மீண்டும் நமிர்;த்தும் ஒரு சந்தர்ப்பம் வரும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு கனவு கண்டது.

தமது இலக்கை அடையும் ஒரே வழியாக புலி ஆதரவு சர்வதேச சக்திகள் சரத் பொன்சேகாவை ஆதரித்து நட்புரிமை பாராட்டின. தமிழ் தேசிய கூட்டமைப்பும் பக்கவாத்தியம் இசைத்தது. குழம்பிய குட்டையில் மீன்படிக்க அனைவரும் தயாரானார்கள்;

இதன்படி இக்கூட்டணியினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அரசியல் ரீதியில் தோற்கடிக்க கங்கணம் கட்டிக்கொண்டு களம் இறங்கினர்.

தமிழருக்கான சுயாட்சி, வடக்கில் அதிஉயர் பாதுகாப்பு வலயம் நீக்குதல், வடக்கு கிழக்கு இணைப்பு ஆகியவை உள்ளடக்கிய ஒப்பந்தம் ஒன்றுக்கு சரத் பொன்சேகா இணங்கினார் என்ற தகவல் ஒன்றும் வெளிவந்தது.

இதன் காரணமாக வெளிநாடுகளில ஒடுக்கப்பட்ட புலி ஆதரவாளர்கள் மீண்டும் உயிர்பெற்றனர். சரத் பொன்சேகாவுக்கு சகல விதத்திலும் ஆதரவு வழங்க முன்வந்தனர்.

~குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்| என்ற கோஷத்தை முன்வைத்து பழிவாங்கும் அரசியலில் எதிரணியினர் ஈடுபட்டனர்.

முப்பது வருட கால துயர்நிறைந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த அரசை நிராகரித்து யுத்த வெற்றிக்கு தாமே காரணம் என சரத் பொன்சேகா பிரசாரம் செய்தார். அரசுக்கு எதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

புலிகளின் தலைவரை தனது படையே கொன்றாகக் கூறும் சரத் பொன்சேகாவுக்கு வெளிநாடுகளில் உள்ள புலி ஆதரவாளர்கள் உதவியது ஏன்?

இவ்வாறானதொரு பின்னணியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 6015934 வாக்குகளைப் பெற்று 18 லட்சம் மேலதிக வாக்ககளால் அமோக வெற்றி பெற்றார்.

சரத் பொன்சேகாவுக்கு 4173185 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. அளிக்கப்பட்ட வாக்குகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 57.88 சதவீத வாக்குகளையும் சரத் பொன்சேகா 40.15 சதவீத வாக்குகளையும் பெற்றனர்.

2005 ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 4,706366 வாக்குகளைப் பெற்றிருந்தார். இது அளிக்கப்பட் வாக்
குகளின் 48.43 வீதமாகும்.

நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தலுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் சரத் பொன்சேகாவைவிட ரணில் விக்ரமசிங்க 533181 வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளார். இதன்படி ரணிலைவிட சரத் பொன்சேகா 8.28 வீத வாக்குகளைக் குறைவாகவே பெற்றுள்ளார்.

நாட்டுத் தலைவரை தீர்மானிக்கும் சக்தியாக இதுகாலவலையில் விளங்கிய வடக்கு கிழக்கு வாக்குகள் இம்முறை செயலற்றுப் போனமை இத்தேர்தலில் காணப்படும் விசேட அம்சமாகும்.

வடக்கிலும் கிழக்கிலும் சரத் பொன்சேகா அதிக வாக்குகளைப் பெற்றதனால் அங்கெல்லாம் புலி ஆதரவு வெளிநாட்டுச் சக்திகளின் கைகள் ஓங்கியிருந்தமை தெளிவாகின்றது. இதன் காரணமாக தமிழ் மக்கள் மீண்டும் ஒரு முறை ஏமாற்றப்பட்டுள்ளனர்.

யுத்தத்தால் பெற்றுக்கொள்ள முடியாமல்போன தமழீழத்தை பொது அபேட்சகர் மூலம் பெறும் முயற்சியும் தோற்றுப்போய்விட்டது. இதற்கு கருவியாக சரத் பொன்சேகா செயற்பட்டமை அவரது அரசில் ஞானசூனியத்தை உணர்த்துகின்றது.

இப்போது அனைத்தும் தெளிவாகிவிட்டது. சரத் பொன்சேகா வெற்றி பெற்ற மாவட்டங்களை ஒன்றிணைத்தால் அங்கு புலிகள் கனவான தமிழீழத்தைக் காணலாம்.

எனவே, தமிழ் மக்கள் இனியும் ஏமாறுவது தவிர்க்கப்படவேண்டும். இல்லையென்றால் மீண்டும் அங்கு இரத்த ஆறு ஒடவைக்கும் சக்திகளில் சதிவலையில் அவர்கள் சிக்கிவிடுவார்கள்.

நாட்டில் வளமான எதிர்காலத்தைத் தோற்றுவிக்க மக்கள் மீண்டும் ஒன்றிணையவேண்டும். ஆதற்கான காலம் இப்போது கனிந்துள்ளது. நாட்டின் நன்மைக்காக வளமான எதிர்காலத்துக்காக நாம் அணைவரும் பேதங்கள் மறந்து செயற்படுவோம்.

Aucun commentaire: