mercredi 5 mai 2010

http://salasalappu.com/

அவதூறுகள் எங்கிருந்து வருகின்றன?..
தர்ம யுத்தத்திற்கு ஈ.பி.டி.பி தயாராக வேண்டும்!

நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் ஈ.பி..டி.பி வெற்றி பெற்றது என்றே கூறலாம். மாற்று ஐனநாயக சக்திகள் அனைவரும் ஆசனங்களை இழந்து போயுள்ள நிலையில் அரசாங்கத்தின் கூட்டு என்று குற்றம் சாட்டப்பட்ட ஈ.பி.டி.பி மட்டும் யாழ் மாவட்டத்தில் 3 ஆசனங்களை பெற்றமை பெரும் வெற்றி என்றே பலராலும் கூறுப்பட்டு வருகின்றது.

இன்னும் அதிகமான ஆசனங்களை ஈ.பி.டி.பி யால் பெறமுடியாமல் போனமைக்கான காரணங்களை அந்த அமைப்பினர் தேட முற்படுவது எதிர் கால ஆரோக்கியங்களுக்கு வழி சமைக்கும். ஆனாலும் ஈ.பி.டி.பி யின் வெற்றியை அவர்களோடு முரண்பாடு கொண்ட சக்திகளும் பொது நோக்கில் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

பரவலாகவே அந்த அமைப்பின் தலைமைப்பொறுப்பில் உள்ள தோழர் தேவா அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்கள். ஆனாலும் வாழ்த்துக்கள் எதுவும் அவர்களோடு உறவில் இருக்கும் சக ஐனநாயக கட்சிகளிடம் இருந்து கிடைத்ததாக தகவல் இல்லை. ஒரு ஆசனத்தோடு இருந்த ஈ.பி.டி.பி மூன்று ஆசனங்களை பெற்றமை அந்த அமைப்பின் வளர்ச்சியை உறுதி செய்கின்றது.

இது தவிர கடந்த காலங்களில் அவர்களுக்கு கிடைத்த வாக்குகளையும் விடவும் அதிகமான வாக்குகளே அவர்களுக்கு கிடைத்திருக்கின்றன. இதில் தோழர் தேவா சொன்ன ஒரு கருத்தையும் ஏற்கலாம் என்றுதான் நம்பத்தோன்றுகிறது.

யாழ் குடா நாட்டில் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 19இ774 11.75மூ பத்தொன்பதினாயிரம் என்றும் அதில் 85 வீதமானவவை வெற்றிலைக்கு வாக்களிக்கப்பட்டவை என்று வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட்டவர்கள் தரப்பில் இருந்து கூறுப்படுகின்றது. இதை நோக்கினால் பாமர மக்கள் வாக்களிப்பில் தவறு விட்டுள்ளனர் என்பது புரிகிறது. இந்த தவறுக்கான பொறுப்பை ஈ.பி.டி.பி யினரே பிரதானமாக ஏற்க வேண்டும். மக்களுக்கு வாக்களிப்பு முறை குறித்து தெளிவு படுத்துவதில் அந்த அமைப்பினர் தவறு விட்டுள்ளனர். இதனால் அவர்களே பெற வேண்டிய வெற்றியில் பாதியை இழந்து விட்டனர். ஆனாலும் வெற்றி என்பது உண்மையில் எதிர்கால வளர்ச்சியை காட்டுகிறது.

தமிழ் தேசியம், தன்னாட்சி, இரு தேசங்கள்! ஒரு நாடு!, போன்ற எழுச்சிகள், மற்றும் நடந்து முடிந்த யுத்தத்தின் பினரும் அரச தரப்பால் இன்னமும் நிறைவேற்றப்படாமை குறித்த அதிருப்திகள் தமிழ் மக்கள் மத்தியில் தொடர்ந்தும் இருக்கையில், பெரும் எடுப்பில் முன்னெடுக்கப்ட்ட பிரச்சார அலைகளையும், அவதூறுகளையும் எதிர்கொண்டு ஈ.பி.டி.பி யினர் பெற்றிருப்பது சாதாரண வெற்றியல்ல.

இதனால் காழ்ப்புணர்ச்சி அடைந்த புலிகளின் ஊதுகுழல்களும், புலிகளின் எச்ச சொச்ச பிரதிநிதிகளும் ஈ.பி.டி.பி க்கு எதிரான பரப்புரைகளை முன்னெடுத்து வருகின்றன. இதில் புலிகளின் பெயரை சொல்லி வயிறு வளர்க்கும் கும்பலும் அடங்கும். அதில் ஒருவர்தான் சப்ரா சரவணபவான் என்ற ஊடகவியலாளர். அடுத்தவர் ஈ.பி.ஆர்.எல்.எவ் சுரேஸ். இதன் பட்டியல் ஏனைய தமிழ் தேசிய கூட்டமைப்பினர், புளொட், மற்றும் புலிசார் இணைங்கள் என நீள்கின்றது.

இவர்களே ஈ.பிடி.பி க்கு எதிரான பிரச்சாரங்களை அவதூறுகளாக முன்னெடுத்து வருகின்றார்கள். அவரது செய்திகளை ஆதாரப்படுத்தி புலிகளின் புலம்பெயர் ஊடகங்கள் ஆட்கடத்தல், கப்பம், பணயம் வைத்தில் என்பனவற்றில் ஈ.பி.டி.பி ஈடுபடுவதாக பரப்புரை செய்து வருகின்றன.

புலிகளின் ஊதுகுழல்கள் பரப்பி வரும் செய்திகளை புளொட் அமைப்பு தமது சொந்த முகவரியை தவிர்த்து பொதுவானதும் நடுநிலையானும் என்ற பெயரில் நடத்திக்கொண்டிருக்கும் இணையத்தளங்களில் வெளியிட்டு தமது அரசியல் காழ்ப்புணர்ச்சிகளையும், இயலாத்தன்மைகளையும் வெளிப்படுத்தி வருகின்றது.

இது தவிர இதே புளொட் குழுவினர் தமது அனாமதேய இணையத்தளங்களின் மூலம் ஈ.பி.டி.பி க்கு எதிரான அவதூறுகளை பரப்பி வர, அதை அதாரப்படுத்தி புலிகளின் இணையத்தளங்கள் ஆகா ஓகோ என்று அவைகளை மறுபிரசுரம் செய்து வருகின்றன.

ஆட்கடத்தில், கப்பம் கோருதல் போன்ற விடயங்கள் ஈ.பி.டி.பி க்கு எதிராக பாரிய அளவில் திட்டமிட்ட வகையில் அவாதூறுகள் பரப்பப்பட்டு வருகையில் அதை எதிர் கொண்டு வரும் ஈ.பி.டி.பி தர்ம யத்த்தில் ஈடபட வேண்டியுள்ளது என மாற்று ஐனநாயக அரசியல் சக்திகள் பலரும் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

இதில், புளொட் அமைப்பு தர்மத்திற்கு எதிரான அதர்மத்தை ஆதரித்து செய்திகளை திட்டமிட்டு வெளியிட்டு வருகின்றது. இது குறித்து அனைத்து மாற்று ஐனநாயக சக்திகளும் புரிந்து கொள்ள வேண்டிய பலவற்றையும் புரிந்து கொள்ள வேண்டும்.

புளொட் யார் பக்கம்?… நீதியின் பக்கமா?… அநீதியின் பக்கமா?… தர்மத்தின் பக்கமா?… அதர்மத்தின் பக்கமா?… இதை உணர்ந்து கொண்டு மாற்று ஐனநாயக சச்திகள் எற்கனவே செயற்பட முன்வந்திருந்ததாலேயே புளொட் அமைப்பு தமது தளத்தையே இழந்து போகும் அளவிற்கு ஐனநாயக சக்திகள் அவர்களது ஆதரவை ஏற்கனவே விலக்கியிருக்கின்றார்கள். இன்னும் இருக்கின்கின்ற அற்ப சொற்ப ஆதரவையும் இழக்க நேரிடும் செயல்களில் ஈடு பட வேண்டாம் என்று வேண்டு கோள் விடுக்கின்றார்கள் ஐனநாயுக சக்திகள்.

மாற்று ஐநாயக சக்திகளை அனாவசியமாக ஆதராமின்றி விமர்சிக்கும் நடவடிக்கையை தவிர்த்து வரும் ஈ.பி.;டி.பி யின் செயற்பாடுகளை மாற்று ஐனநாயக சக்திகள் பலரும் வரவேற்று வருகின்றார்கள். ஆனாலும் புளொட் அமைப்பின் இந்த செயல் நீடிக்குமேயானால் அவர்கள் மக்கள் மத்தியில் இன்னமும் அம்பலமாகும் நிகழ்வுகளை அடுத்து வரும் அரசியல் களத்தில் எதிர்பார்க்கலாம் என்றே நம்பப்படுகிறது.

இது அருவருப்பான நிலைகளை தோற்றுவித்து விடுமோ என்ற அச்சம் தோன்றி வருகின்றது. ஆனாலும் புளொட் அமைப்பு போன்ற மக்கள் தளத்தை அறவே இழந்து வரும் குழுக்களுக்கு அனாவசியமாக பதிலளித்து தமது காலத்தை வீணடிக்க கூடாது என்ற விடயத்தை ஈ.பி.டி.பி யிடம் இருந்து மாற்று ஐனநாயக சக்திகள் பலரும் எதிர் பார்க்கின்றார்கள். இதே வேளை வருகின்ற அவதூறுகளுக்கு ஈ.பி.டி.பி தன்நிலை விளக்கத்தை கொடுக்க வேண்டும். என்ற கருத்தும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

ஈ.பி.டி.பி குறித்த ஆரோக்கியமான விமர்சனங்களும் தேவையான ஒன்றாகவே கருதப்படுகின்றது. ஈ.பி.டி.பி யும் விமர்சனங்களுக்கு உட்பட்ட ஒரு அமைப்பு என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

இன்று ஈ.பி.டி.பி க்கு எதிராக முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட அவதூறுகளை எதிர் கொள்வதற்கு ஈ.பி.டி.பி உதிரிகளாக இருக்கும் ஐனநாயக சக்திகளோடு இணைந்து செயற்பட முன்வர வேண்டும்.

முரண்பாடுகளுக்கு அப்பால் ஈ.பி.டி.பி யோடு உறவுகளை பலப்படுத்தி கொண்டு அவர்களை
ஆரோக்கியமான பாதை நோக்கி தொடர்ந்தும் வழி நடத்தி செல்ல வேண்டியது கட்டாயமாகும்.
இது தவிர மாற்று வழி வேறு இருப்பதாக தெரியவில்லை!

ஈ.பி.டி.பி யின் இணக்க அரசியலின் கணிசமான விடயங்களை ஏற்க முடிகின்றது. நடை முறை சார்ந்து அவர்கள் சிந்திப்பது பிரதான விடயம். இது தவிர அவர்களது அரசியல் தீர்வு குறித்த முயற்சிகள் சாத்தியமான ஒன்று.

ஆனாலும் புளொட் போன்ற சிறு குழுக்களின் காழ்ப்புணர்ச்சிகள் போலன்றி, அல்லது புலிசார் ஊடகங்களின் அவதூறுகளை போலன்றி ஈ.பி.டி.பி குறித்து பலரும் கொண்டிருக்கும் விமர்சனங்கள் பல ஆரோக்கியமானவையாக உள்ளன. இவைகள் பல தளங்களிலும் விவாதிக்கப்பட்டு வருகின்றன.

இவைகளை அடுத்து வரும் பதிவுகளில் இடலாம் என்பது எண்ணம். விமர்சனங்களை ஏற்பது
என்ற விடயத்தில் ஈ.பி.டி.பி சரியாக சிந்திக்கும் என்பது எதிர்பார்ப்பு! சொல்லப்போகும் விமர்சனங்கள் ஈ.பி.டி.பி யுடன் கை குலுக்குவதற்காகவே. அவர்களது நடை முறைசார்ந்த கொள்கை நிலைப்பாடை ஏற்று ஏனைய உதிரி ஐனநாயக சக்திகளும் செயற்படுவதற்கே!..

ஈ.பி.டி.பி முன்னெடுக்கும் ஐனநாயக முறையிலான தர்ம யுத்தத்திற்கு முரண்பாடுகளுக்கு அப்பாலும் ஆதரவளிப்போம். விமர்சனங்கள் வேறு! அவதூறுகள் வேறு! அவதூறுகள் எங்கிருந்து வருகின்றன என்று பார்த்தால் அவைகள் அரசியல் எதிரிகளின் காழ்ப்புணர்ச்சிகளில் இருந்தும் இயலாத்தன்மைகளில் இருந்துமே தோன்றுகின்றன.

விமர்சனங்கள் தோன்றும் இடம் உன்னை நான் தவறாக போக விடமாட்டேன் என்று அக்கறை கொள்ளும் நண்பனிடம் இருந்தே….

அடுத்த பதிவில் சந்திப்போம்!…….

பண்டிதன்!

Aucun commentaire: