samedi 1 mai 2010


நடைமுறை சாத்தியமான வழிமுறையில் உரிமைகளை வென்றெடுக்க டக்ளஸ் தேவானந்தா அழைப்பு

தமிழ் பேசும் மக்கள் இழந்துபோன உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கு நடைமுறை சாத்தியமான வழிமுறையில் அணி திரளவேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம்அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள மேதினச்செய்தியில் தெரிவித்துள்ளார்.

இழப்புக்களை சந்தித்து,தியாகங்களை செய்த நிலையில்,உரிமைக்கான போராட்டம் என்பது அழிவு யுத்தமாக மாறியது.

இச்சந்தர்ப்பத்தில் தான் இலங்கை,இந்திய ஒப்பந்தம் வழங்கிய அரியதோர் சந்தர்ப்பத்தின் மூலம் நாம் ஆயுதப்போராட்டத்தை கைவிட்டுவிட்டு ஜனநாயக வழிமுறைக்கு திரும்பும் நிலை ஏற்பட்டது என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் குறிப்பிட்டுள்ளார். சனிக்கிழமை, 01 மே 2010 22:10

யாழ் கடத்தல் சம்பவகள் எம் மீது சேறு பூசும் நடவடிக்கைகள்:டக்லஸ்

யாழ்ப்பாணத்தில் இடம் பெற்று வரும் கடத்தல் நடவடிக்கைகள் அனைத்தும் எங்கள் மீது சேறு பூசும் நடவடிக்கைள் என பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் ஒரு சில கடத்தல் சம்பவங்கள் இடம்பெறுகின்றது எனினும் இச்சம்பவங்கள் எம்மீது சேறு பூசும் நடவடிகைகளாக சிலர் திட்டமிட்டு மேற்கொள்ளுவதாகவும் தெரிவித்தார்.

தற்போது விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு படையினர் பலரும் யாழ் நகரில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் சில தமிழ் பாதுகாப்பு அதிகாரிகளும் சேவையில் ஈடுபடுத்தப்படுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

யாழ் நகரில் அதிகரித்து வரும் கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் தொடர்பு கொண்டு கேட்ட போதே டக்லஸ் தேவானந்தா இதனை எமது எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.


It’s my day too…

Today is May Day. This day is synonymous with International Workers’ Day, or Labour Day, a day of political demonstrations and celebrations organised by the unions, political and socialist groups. Pictured here a ‘nattami’ who transfers goods from lorries to the shops in Pettah to earn his day’s living on a day set aside to honour the toil and sweat of many workers like him.

யாழ் மாவட்டத்தில் தமிழ்க்கூட்டமைப்பின் தேர்தல் பின்னடைவுக்குக்காரணம் என்ன

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட சி.வி.கே. சிவஞானம், கடந்த 24 ஆம் திகதி நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட் டக் கிளையின் பொதுச்சபைக் கூட்டத்தில் தேர்தல் பின்னடைவு களுக்கான காரணத்தை விளக்கி உரையாற்றினார்.

யாழ்.மாவட்டத்தைப் பொறுத்தவரை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு பெற்றிருந்த பொன்சேகாவுக்குக் கிடைத்த வாக்குகளை விட, பொதுத் தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்புக்குக் கிடைத்த வாக்குகள் சுமார் நாற்பதாயிரம் குறைவாகும். மக்களின் அக்கறையின்மை, அதிருப்தி, உட்கட்சிக் குழப்பங்கள் போன்றவை இதற்குக் காரணமாக இருக்கலாம்.
வேட்பாளர் தெரிவு முறையாக இடம்பெறவில்லை. மாவட்ட முறைத் தேர்தல் இது என்று கூறப்பட்டாலும் வேட்பாளர் தெரிவு அதைச் சரியாகப் பிரதிபலிக்கவில்லை.
நான் நல்லூர்த் தொகுதியின் நிரந்தரக் குடியிருப்பாளன். முன்னரும் இரண்டு தேர்தல்களில் போட்டியிட்டிருக்கின்றேன். இத் தேர்தலில் என்னை விட நல்லூர்த் தொகுதியிலிருந்தே மேலும் ஐந்து வேட்பாளர்களைக் கூட்டமைப்பு தேர்தல் களத்தில் நிறுத்தியிருந்தது. இது, என்னை மிகவும் பாதித்தது. இவர்கள் வேறு தொகுதிகளைக் கவனிப்பார்கள் என்று கூறப்பட்டபோதும், நல்லூர்த் தொகுதி வாக்குகளையே இவர்கள் எல்லோரும் பிரித்தனர்.
வேட்பாளர் தெரிவின்போது யாழ்ப்பாணத் தொகுதிக்கு ஒருவரும், கோப்பாய்த் தொகுதிக்கு இருவரும், நல்லூர்த் தொகுதிக்கு அறுவருமாக மூன்று அடுத்தடுத்த தொகுதிகளை வசிப்பிடமாகக் கொண்ட ஒன்பது பேர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர். ஏனைய எட்டுத் தொகுதியிலிருந்தும் மூவர் நியமிக்கப்பட்டனர்.
வேட்பாளர் தெரிவின்போது ஏனைய பகுதிகளுக்கு அதிக கவனமும், இடமும் அளிக்கப்பட்டிருந்தால் அந்தந்தப் பகுதிகளில் இருந்து அதிக வாக்குகளை இன்னும் திரட்டியிருக்கக்கூடிய வாய்ப்புக் கிட்டியிருக்கும்.
தேர்தலில் வேட்பாளர்கள் தோற்கவில்லை. கட்சியே தோற்றது.
நேரடியாக ஐந்துபேரை இந்தப் பட்டியலில் தமிழரசுக் கட்சி நிறுத்தியது. ஆனால் ஒரு இடத்தை மட்டுமே தமிழரசுக் கட்சியால் பெற முடிந்தது.
கடந்த தடவை பெற்றிருந்த எட்டு இடங்களுடன் களமிறங்கிய கூட்டமைப்பினால் இம்முறை ஐந்து இடங்களையே தக்கவைக்க முடிந்தது.
கடந்த தடவை போல கூட்டமைப்பு இம்முறை எட்டு ஆசனங்களைப் பெற்றிருந்தால் எட்டு அங்கத்தவர்கள் நாடாளுமன்றுக்குத் தெரிவாகியிருப்பர். கூட்டமைப்பு ஐந்து இடங்களைப் பெற்றபடியால் ஐவர் தெரிவாகினர். எனவே, தோல்வி கூட்டமைப்புக்கே. தவிர, தெரிவாகாத வேட்பாளர்களுக்கு அல்ல.
தேர்தல் பிரசாரங்களில் உட்கட்சிப் போட்டி மக்களை வெறுப்படையவும் வாக்களிக்காமல் ஒதுங்கவும் வழி வகுத்தது என்பதை மறுப்பதற்கில்லை.எனக்கு வாக்களிக்க வேண்டாம் என எமது இரு வேட்பாளர்களே கூறி வந்தமை எனக்குத் தெரியும். சில வேட்பாளர்கள் தமது இலக்கத்துக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும் என்று பிரசாரம் செய்தனர். வேறு சிலரோ தமக்கு மட்டும் வாக்களித்து ஏனைய எவருக்கும் வாக்களிக்கக்கூடாது எனவும் பிரசாரம் செய்தார்கள்.
என்னைத் தமிழ்க் காங்கிரஸ்காரர் என சிலர் விமர்சித்தனர். "தமிழரசுக் கட்சிக்காரன் தேர்தல் ரிக்கெட்டுக்காகத் தமிழ்க் காங்கிரஸுக்கு வந்தவன்' என்று கூறித் திரிந்தனர். கட்சி ரீதியாகப் பார்த்தால் இதில் சற்று நியாயம் இருக்கலாம்.
ஆனால் 58 வருடங்கள் தமிழரசுக் கட்சி சார்பானவனாக இருந்த என்னை "இவன் காங்கிரஸ்காரன். தேர்தல் முடிந்ததும் காங்கிரஸுக்கே போய்விடுவான்' எனத் தமிழரசுக் கட்சியினரில் ஒரு குழுவினரே பிரசாரம் செய்தமை கவலைக்குரியது.
"விடுதலைப்புலிகள்தான் ஏகப் பிரதிநிதிகள்' எனக் கூறி தமது விசுவாசத்தைக் காட்டிக்கொண்டோர் இப்போது புலி எதிர்ப்புக் கருத்தைப் பிரதிபலித்தமையும் கவலைக்குரியது.
ஆனால் நான், 1982 87 இல் எங்கே நின்றேனோ இப்போதும் அக்கருத்திலேயே நிற்கிறேன்.
இயல்பு வாழ்க்கை திரும்பிய பின்பே அரசியல் தீர்வு எனப் பேசி அரசியல் தீர்வு நடவடிக்கைகளை இழுத்தடிக்கக் கூடாது. இயல்பு நிலைக்குத் திரும்பலும், அரசியல் தீர்வு நடவடிக்கைகளும் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டும். அரசியல் தீர்வு எட்டப்படாமல் இயல்பு நிலையை நாம் துரிதமாக உருவாக்கமுடியாது என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.
எனக்கு மட்டும் அப்படி எவ்வாறு விருப்பு வாக்குகளின் எண்ணிக்கை கனகச்சிதமாக மூன்று தொடர் பூச்சியங்களைக் கொண்டதாக ஏழாயிரம் என வரும் என்பது கவனிக்கத்தக்கது. நான் ஒரு கணக்காளன். நிர்வாகி. இதன் பின்புலம் குறித்து எனக்குத் தெரியும். மக்களுக்கும் தெரியவரும்.
பேராசிரியர் சிற்றம்பலம்
இதேசமயம், இக்கூட்டத்தில் உரையாற்றிய பேராசிரியர் சிற்றம்பலமும், வேட்பாளர் தெரிவு தொடர்பாக சிவஞானம் தெரிவித்த கருத்தை அங்கு வழிமொழிந்து உரையாற்றினார்.
"வேட்பாளர் தெரிவுமுறை திருப்தி தரவில்லை. அது நியாயமாக இடம்பெறவில்லை. கொழும்பில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை இங்கு திணித்தார்கள். அதுவும் பின்னடைவுக்குப் பிரதான காரணம்.'' என்றார் சிற்றம்பலம்.
சர்வதேச மே தினம்

உதிரத்தை வியர்வையாகச் சிந்தி உழைத்து மானிட வளர்ச்சிக்கு மாபெரும் பங்காற்றிய உழைப்பாளர்கள் எட்டு மணி நேரம் கொண்ட உழைப்பை தங்களுடைய உரிமையாகப் போராடி பெற்ற நாளே இன்றைய மே தினமாக அனுஸ்டிக்கப்படுகிறது.

பொதுவுடைமைத் தத்துவத்திற்கு பெரும் எதிர்ப்பு காட்டி வரும் ஐக்கிய அமெரிக்காவில் 1086 ஆம் ஆண்டு பில டெல்பியா நகரத்தில் முதன் முதலில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தடுப்பதற்காக அவர்களின் முதலாளி வர்க்கத்தினர் சதி வழக்குப்போட்டனர். இந்த விசாரணாயின் போது தான் தொழிலாளர்க்ளிடம் 19,20 மணித்தியாளங்கள் வேலை வாங்கப்பட்ட விடயம் வெளி வந்தது. இதனை தொடர்ந்து 1820,1830 களில் வேலை நேரத்தை குறைக்க வேண்டுமென பல தொழிற்சங்கங்களும் வேலை நிறுத்தப்போராட்டங்களை நடத்தின.

இதனிலும் பிலடெல்பியா நகரம் இயந்திர தொழிலாளர்கள் சங்கம் தான் உலகின் முதற் தொழிற் சங்கமாக உருவாக்கப்பட்டது. இதன் இரு ஆண்டுகளின் பின்னரே இங்கிலாந்தில் தொழிற்சங்கங்கள் உருவாகி முதன் முதலாக 10 மணி நேர வேலை நாள் என்ற கோரிக்கையை முன்வைத்தது.

1884 இல் கட்டிடம் கட்டும் தொழிலாளர்கள் நடத்திய வேலை நிறுத்தம் அமெரிக்காவில் எட்டு மணி நேர வேலை நேரம் என்ற போராட்டங்கள் வெடித்தது தான் மே தினம் உருவாக காரணமாக இருந்தது. எனலாம்.அக்காலத்தில் தொழிற்சங்கங்கள் அனைத்தும் போர்க் குணமுள்ள ஸ்தாபனமாகவே காணப்ப்ட்டது.1889இல் பரிசில் இந்த ஸ்தாபனத்தின் முதல் மாநாடு நடைபெற்றது. அதிலே மே 1ஆம் திகதி தொழிலாளர் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது. அன்றைய தினமே தொழிலாளர்கள் அனைவருக்கும் தத்தமது நாட்டிற்கேற்ற வகையில் தேவைகளுக்கான ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தொழிற்சங்க வாதிகளின் வளர்ச்சியையும் கோரிக்கைகளையும் சகிக்க முடியாத முதலாளி வர்க்கத்தினர் 1886இன் பிற்பகுதியில் தொழிலாளர்கள் மீது திட்டமிட்டு தாக்குதல்களை மெற்கொண்டனர். இதன் காரணமாக தொழிலாளர்கள் பல இழப்புக்களை சந்தித்ததுடன் பல உயிரிழப்புக்களையும் சந்திக்க நேர்ந்தது. இதனால் சிக்காக்கோ தொழிலாளர் தலைவர்கள் பலர் தூக்கிலிடப்பட்டனர், இரு ஆண்டுகளுக்கு பிறகு 1888 இல் செயிண்ட் லூயிஸ் கூட்டமைப்பு கூடியது. (தற்போது அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு என்று அழைக்கப்படுகின்றது.)

1889 ஆம் ஆண்டு சாமுவேல் கோம்பர்ஸ் தலைமையில் நடந்த அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பின் ,மாநாடு வேலை நிறுத்த இயக்கத்தை முறைப்படுத்துவதில் வெற்றி பெற்றது. வலுவான முறையில் செயற்பட்ட மர வேலை தொழிலாளர் சங்கம் முதலில் வேலை நிறுத்தத்தில் இறங்குவது என்றும் அது வெற்றி பெற்ற பின் ஏனைய சங்கங்கள் இறங்குவது என்றும் முடிவெடுக்கப்பட்டது. இதில் மரவேலை தொழிலாளர் சங்கப் போராட்டம் வெற்றியடைந்தது. அதைத்தொடர்ந்து எல்லா நாடுகளிலும் ,நகரங்களிலும் மக்களின் எட்டு மணி நேர வேலை நேரம் சட்ட பூர்வமாக கோரி அரசாங்கத்திடமும் நிர்வாகத்திடமும் போராட வேண்டும்.

இதையே உலகம் முழுவதும் ஆர்ப்பாட்டமாக நடத்த பரிஸ் மாநாட்டு முடிவுகளை நிறைவேற்றக்கோரியும் இம்மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது.இதன் படியே ஒவ்வொரு வருடமும் மே தினக் கொண்டாட்டங்கள் உலகெங்கும் அரங்கேறி வருகிறது. எமது நாட்டை பொறுத்தவரை மே தினத்தை அனுஸ்டிக்கும் போது எம்மவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் எப்படி எதிர்கொள்ளுகிறார்கள் என்று நோக்குவோமாயின் பொருளாதார, வாழ்வாதார பிரச்சினை வேதனத்தை பார்த்து வாழ்வை மேம்படுத்தல் விலைவாசி உயவை சமாளித்தல் வறுமைக் கோட்டிலிருந்து மீளுதல் பெருந்தோட்டத்ததுறை வாழ்வாதாரம் என்பனவே தற்போதைக்கு மே தின சாராம்சம் எனலாம்.

இவற்றை தீர்க்க வேண்டிய கடமையில் கடப்பாட்டில் இன்றைய மே தின விழாக்கள் , கொண்டாட்டங்கள் , கருத்தரங்குகள் அமைய வேண்டியது காலத்தின் கடப்பாடாகும்.