vendredi 30 avril 2010
பௌத்த கொடி உருவாக்கப்பட்டு இன்றுடன் 125 வருடங்கள் நிறைவு
இலங்கையில் பௌத்த கொடி உருவாக்கப்பட்டு இன்றுடன் 125 வருடங்கள் நிறைவடைகின்றன.
பௌத்தர்கள் புனித நாளாகக் கருதும் போயா தினத்தை விடுமுறையாக அறிவிக்குமாறு 1897 ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் திகதி பிரித்தானிய ஆட்சியாளர்களிடம் இலங்கையிலுள்ள பௌத்த குழுவொன்று கோரிக்கை விடுத்திருந்தது. பிற்காலத்தில் அந்தக் குழுவுக்கு ஹிக்கடுவ ஸ்ரீ சுமங்கள தேரர் தலைமை வகித்தார்.
அதன்பின்னர் பிரித்தானிய ஆட்சியாளர்கள் போயா தினத்தை விடுமுறை தினமாக்குவதற்கு அனுமதியளித்தனர். அதன் பின்னர் 1885 ஆம் ஆண்டு பௌத்த கொடி உருவாக்கப்பட்டது.
அக்காலப்பகுதியில் ஜே.ஆர்.டி. சில்வா, கேர்ணல் ஹென்றி எஸ். ஒல்கோட் ஆகியோரின் சிந்தனைகளின் கீழ் பௌத்த கொடி வடிவமைக்கப்பட்டது.
ஆறு வர்ணங்களை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்ட பௌத்த கொடியினை பின்னர் 1889 ஆம் ஆண்டு ஜப்பன், பர்மா உள்ளிட்ட நாடுகளின் ஆலோசனைக்கமைய அநாகரிக தர்ம பால, ஒல்கோட் இருவரும் இணைந்து 5 வர்ணங்களில் மாற்றியமைத்தனர். நீலம், மஞ்சள், சிவப்பு, வெள்ளை, ஒரேஞ் ஆகிய வர்ணங்களை உள்ளடக்கியதாக பௌத்த கொடி உருவாக்கப்பட்டது.
பரிந்துரைக்கப்பட்ட பௌத்த கொடி, கொட்டாஞ்சேனை தீபதுத்தமாராம பௌத்த விகாரையில் வைத்து முதன் முதலாக இலங்கையில் பிரகடனப்படுத்தப்பட்டது.
பௌத்த கொடி 1885 ஆம் ஆண்டு இலங்கையின் பௌத்த மதம் சார்ந்து உருவாக்கப்பட்டது. உலக பௌத்த மதத்தைப் பின்பற்றுவோர் ஒன்று கூடிய பௌத்த மத சம்மேளனத்தின் மாநாட்டின் போது, அதன் தலைவரும் பேராசிரியருமான ஜீ.பி. மலலசேகர, 1952 மே 5 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் பௌத்த மத கொடிக்கு அங்கீகாரம் வழங்கினார்.
முதலாவது நீல வர்ணம் - பிரபஞ்ச ஒற்றுமை
இரண்டாவது மஞ்சள் - நடு நிலைமை
மூன்றாவது சிவப்பு - ஆசிர்வாதம்
நான்காவது வெள்ளை - புனிதம்
ஐந்தாவது ஓரேஞ் - புரிந்துணர்வு
இதுவே உலகில் பௌத்த மத கொடியின் ஒருங்கிணைந்த கோட்பாடாகும்.
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire