பேசா மடந்தைகளாக நிருவாகமும் அரசியல்வாதிகளும்.
யாழ் பல்கலைக்கழகத்தில் தற்கொலைகள் அதிகரிப்பு பேசா மடந்தைகளாக நிருவாகமும் அரசியல்வாதிகளும்.
கே.கே எஸ் வீதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யாழ். பல்கலைக்கழக விவசாய பீட மாணவியான 29 வயதான வீரராசா மாதுமையாள் தன்னைத்தானே தீமூட்டித் தற்கொலை செய்து கொண்டுள்ளார் இந்தச்சம்பவம் இன்று 28.04.2010 நடைபெற்றது. அவரது சடலம் பிரேதப் பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக பல்கலைக்கழக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ளநிலையில் இச்சம்பவமும் இடம்பெற்றுள்ளமை மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
போரினால் உளரீதியாக பாதிக்கப்பட்ட மாணவர்களும், கல்வியைத்தொடரமுடியாமல் வறுமையில் வாடும் மாணவர்களுமே இவ்வாறு தற்கொலை செய்துகொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாளுக்கு நாள் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுகின்றபோதிலும் பல்கலைக்கழக நிருவாகமோ, அரசியல் வாதிகளோ உளரீதியாக பாதிக்கப்பட்ட மாணவர்களையோ அல்லது பல்வேறு தேவைகள்உடைய மாணவர்களையோ ஆற்றுப்படுத்த எந்தவொரு நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லையென பல்வேறு தரப்பிடமிருந்தும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
வெள்ளைவான் கடத்தல் தம்பதியினர் கைது.
பருத்தித்துறை பொலிகண்டிப்பகுதியிலிருந்து துன்னாலைப்பகுதிக்கு சைக்கிளில் உறவினர் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த யுவதியை வெள்ளைவானில் கடத்தி சைக்கிள் நகைகள் என்பவற்றை அபகரித்த தம்பதியினரை நெல்லியடிப்பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் சனிக்கிழமை நடைபெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம்பற்றி தெரியவருவதாவது குறிப்பிட்ட 24 வயதுடைய யுவதியை வானில் கடத்தி கழுத்தை நெரித்துள்ளனர் இதனால் பெண் மயக்கமுற பெண் இறந்து விட்டார் என நினைத்து பக்கத்திலுள்ள புதர்காட்டுக்குள் வீசிச்சென்றுள்ளனர். பெண்மயக்கம் தெளிந்து மறுநாள் வீட்டுக்குப்போய் நடந்தவற்றைக்கூற பொலிஸாரின் நடவடிக்கை காரணமாக தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சைக்கிள் நகைகளும் மீட்கப்பட்டுள்ளன. இவர்கள் போலித்தம்பதியினர் எனவும் தம்பதியினர் எனக்கூறி வாடகை வீட்டில் தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Aucun commentaire:
Enregistrer un commentaire