பாட்டாளி வர்க்கம் நாட்டின் முதுகெலும்பு
உலக நாடுகள் எங்கும் தொழிலாளர் தினம் இன்று கொண்டாடப்படுகி றது. பாட்டாளி வர்க்கத்தின் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டு மென்பதே இன்றைய மே தினத்தின் தொனிப்பொருள் ஆகும்.
உலக நாடுகளை எடுத்துக் கொள்வோமானால் அனைத்துத் தொழிலாளர்களின் உரிமைகளும் இன்றுவரை முற்றுமுழுதாக நிறைவேற்றப்படவில்லை. உலகத் தொழிலாளர்களில் ஒரு பகுதியினர் உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் இப்போதும் கூட அல்லலுறுகின்றனர்.
குறைந்த வேதனம், கூடுதல் நேரம் வேலை வாங்கப்படுதல், விடுமுறை மறுப்பு, ஓய்வூதியமின்மை போன்ற பல்வேறு அடிப்படை மீறல்களுக்கு மத்தியில் உலகில் ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
அதேசமயம் பெரும்பாலான தொழிலாளர்கள் அனைத்து அடிப்படை உரிமைகளையும் பெற்று பணி புரிந்து வருகின்றனர். இவர்கள் தங்களது தொழிலுக்குரிய உத்தரவாதத்துடன் கடமையாற்றுகின்ற னர். பொதுவாக நோக்கும் பட்சத்தில் உலகத் தொழிலாளர்கள் தற்போது அடிப்படை உரிமைகளுடன் பணிபுரிந்து வருகின்றன ரென்றே கூற வேண்டும். தொழிலாளர்களுக்கான உரிமை எவ்வாறு கிட்டிய தென்ற வரலாற்றை சற்று புரட்டிப் பார்ப்பது இங்கு பொருத்தமானதாகும்.
ஒரு நூற்றாண்டுக்கு முந்திய காலப் பகுதியை எடுத்துக் கொள்வோ மானால் தொழிலாளர்கள் அன்றெல்லாம் உரிமைகளைப் பெற்றிருக்க வில்லை. அடிமைகளைப் போலவே நடத்தப்பட்டனர். தினமும் பதினான்கு மணி நேரம் வரை தொழில் செய்ய வேண்டிய கட்டாயமும் இருந்தது.
இதுபோன்ற அடக்குமுறைகளையெல்லாம் தகர்த்தெறிய வேண்டு மென்ற உத்வேகத்தில் 1886ம் ஆண்டு சிக்காகோ நகரில் சுமார் ஒன்றரை இலட்சம் தொழிலாளர்கள் ஒன்றுகூடி தொழிலாளர் உரிமை இயக்கத்தைத் தொடங்கினர்.
இக்காலப் பகுதியில் தொழிலாளர்களின் உரிமைப் போராட்டத்தை நசுக்கும் நோக்குடன் முதலாளி வர்க்கத்தினர் தங்களது பண பலத்துடன் செல்வாக்கைப் பயன்படுத்தினர். முதலாளிமாருக்குச் சார்பாக சிக்காகோவில் தேசியப் படையினர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் நான்கு தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
இத்தாக்குதலைக் கண்டித்து தொழிலாளர் அமைப்பினர் ஏற்பாடு செய்த கண்டனக் கூட்டமொன்றின் மீதும் தேசியப் படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். அங்கும் தொழிலாளி ஒருவர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்தனர்.
தொழிலாளர் மீதான அடக்குமுறைகள் அத்துடன் நின்றுவிடவில்லை. சதித் திட்டம் தீட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டு தொழிலாளர் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். ஒருசிலர் தூக்கிலிடப் படும் பரிதாபமும் ஏற்பட்டது.
ஆனாலும் பாட்டாளி மக்கள் சளைத்து விடவில்லை. அவர்களது தொடர்ச்சியான போராட்டம் வெற்றியடைந்தது. தொழிலாளர்களின் உரிமைக் கோரிக்கையும் இயக்கமும் வலிமை பெற்றன. தொழிலாளர் கள் தினமும் எட்டு மணி நேரமே வேலை செய்ய வேண்டுமென்ற உரிமை கிடைத்தது. பாட்டாளி வர்க்கத்தினருக்கு ஏனைய உரிமை களும் கிடைப்பதற்கு அன்றைய போராட்டமே வழியேற்படுத்தியது.
சிக்காகோ போராட்டத்திலிருந்து இன்றுவரையான காலப் பகுதியில் தொழிலாளர்களுக்கு பல்வேறு உரிமைகளும் சலுகைகளும் படிப்படியாகக் கிடைத்து வந்துள்ளன. தொழிலாளர்களுக்குரிய உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் எமது நாடும் முக்கியமானது.
அரசாங்க திணைக்களங்களில் மாத்திர மன்றி அரச சார்பு மற்றும் தனியார் நிறுவனங்களில் கடமை புரியும் தொழிலாளரின் உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் வலுவான சட்ட ஏற்பாடுகள் இலங்கையில் உள்ளன.
அதேசமயம் சட்ட விதிமுறைகளை மீறும் வகையில் பல்வேறு தனியார் நிறுவனங்களும் அலட்சியமாகச் செயற்பட்டு வருவதனால் பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதையும் இங்கே குறிப்பிடுவது அவசியம்.
தனியார் நிறுவனங்கள் பலவற்றில் எராளமான தொழிலாளர்கள் நிரந்தரமற்றபடி பணிபுரிந்து வருகின்றனர். நினைத்த மாத்திரத்தில் அவர்கள் வேலையிலிருந்து நீக்கப்படுகின்றனர். இதுதவிர இத்தொழிலாளர்களுக்குரிய ஊழியர் சேமலாப நிதி தொழில் வழங்குநர்களால் செலுத்தப்படுவதில்லை. மேற்படி தொழிலாளர்கள் ஓய்வு பெறும் காலப் பகுதியில் வெறுங்கையுடனேயே வீடு செல்ல வேண்டியேற்படுகிறது.
தொழிலாளர்கள் பாதிப்புக்குள்ளாகின்ற மற்றொரு இடம் மலையகப் பெருந்தோட்டங்களாகும். பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்குகின்ற துன்பங்கள் தொடர்பாக ஊடகங்களில் தொடர்ச்சியாக செய்திகள் வருகின்றன. அம்மக்களின் துன்பங் களைக் களைவதற்கு அரசாங்கம் பலவிதமான திட்டங்களைச் செயற்படுத்தி வருகிறது.
உலகத் தொழிலாளர் தினமான இன்றைய நாளில் பாட்டாளி வர்க்கம் அனுபவித்து வரும் உரிமைகளை நாமெல்லாம் நினைவு கூருகிறோம். அதேசமயம் உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் அல்லலுறும் தொழிலாளர்களின் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டிய அவசியத்தையும் இன்றைய மேதினத்தில் கவனத்தில் கொள்வது முக்கியம்.
புலிகளின் சர்வதேச வலையமைப்பை முறியடிக்க அடுத்தகட்ட நடவடிக்கை
புலிகள் ஆயுத ரீதியாக அழிக்கப் பட்டாலும் பிரபாகரனின் கொள்கையை மையப்படுத்தி செயற்பட்டு வரும் சர்வதேச வலையமைப்பை முறியடிப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.ஆணையிறவில் அமைக்கப்பட்டுள்ள படை வீரர்களுக்கான நினைவுத் தூபி திறப்பு வைபவத்தில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பின்னரே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
புலம்பெயர்ந்துள்ள மக்களுக்கு இலங்கை தொடர்பாகவும் தமிழ் மக்கள் தொடர்பாகவும், தவறான தகவல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இவை ராஜதந்திர மட்டத்தில் முறியடிக்கப்பட வேண்டும்.
நாடு கடந்த தமிbழ அரசு ஒன்றை அமைப்பதற்காக முயற்சி மற்றும் உலகத் தமிழர் பேரவை, புலம் பெயர்ந்த தமிழர்கள் அமைப்பு என்பவற்றின் ஊடாகத்தான் பிரபாகரனின் நிலைப்பாட்டை முன்னெடுக்க ஒரு சிறிய குழு முயற்சித்து வருகிறது.
புலம் பெயர்ந்துள்ள தமிழ் மக்களுக்கு தெளிவுபடுத்தவும் இந்த வலைய மைப்பை முறியடித்து இல்லாதொழி ப்பதற்கும் எமது வெளிநாட்டமைச்சுக்கு பாரிய பொறுப்பிருக்கிறது. எனவே, வெளிநாட்டமைச்சின் ஊடாகவும், இராஜதந்திர மட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மலேஷிய நாட்டுடன் நாம் புலனாய்வுத்துறையுடனும், இராஜதந்திர உறவின் ஊடாகவும் புலம்பெயர்ந்த மக்களுக்கு தெளிவுபடுத்தியதன் காரணமாகத்தான் அந்த நாட்டிலிருந்து சில பயங்கரவாதிகளை கைது செய்ய முடிந்தது என்றும் தெரிவித்தார்.
இராஜதந்திர மட்டத்தில் தமிழ் மக்களுக்கு பொய்ப்பிரசாரம் தொடர்பாக முறியடித்து வரும் பட்சத்தில்தான் புலம்பெயர்ந்தவர்கள் இன்று இலங்கையில் முதலீடு செய்யவும் முன்வந்துள்ளனர். இது எமக்கு நல்ல உதாரணமாகக் கொள்ள முடிகிறது.
சர்வதேச மட்டத்தில் நாம் முன்னெடுக்கும் சகல நடவடிக்கைகளும் எமக்கு வெற்றியை தருகிறது.
இதனை நாம் தொடர்ந்து முன்னெடுப்பதுடன் புலனாய்வுத்துறையை பலப்படுத்தி இந்த நிலையை தக்கவைத்துக்கொள்ள தொடர்ந்தும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
ஆரம்ப காலங்களிலும் சிறுசிறு குழுக்களாக அமைப்புகளாக ஆரம்பித்துத்தான் புலிகள் பலம் மிக்க அமைப்பாக உருவெடுத்தனர். அதுபோன்ற ஒருநிலையை மீண்டும் ஏற்படுத்த நாம் இடமளிக்கப் போவதில்லை என்றார்.
பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோதாபய ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்துகொண்ட நேற்றைய விழாவில் அவரது பாரியார் அயோமா ராஜபக்ஷ, இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, அவரது பாரியார் மஞ்சுளிகா ஜயசூரிய, பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் விமானப்படை தளபதியுமான எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக்க, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திசர சமரசிங்க, யாழ். கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ஹதுருசிங்க, வன்னி கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரட்ண, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா, மேஜர் ஜெனரல் சாகி கால்லகே உட்பட வன்னி படை நடவடிக்கைகளில் ஈடுபட்ட படைப்பிரிவுகளின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
Aucun commentaire:
Enregistrer un commentaire