jeudi 22 avril 2010

இணக்கப்பாட்டு கலாசாரம் தோன்றட்டும்!

பொதுவாழ்விலோ அல்லது தனிப்பட்ட வாழ் விலோ இணக்கப்பாடென்பது மிகவும் அவ சியமான ஒன்றாகிறது. எக்காலமும் முரண்பா டுகள் தொடருமானால் நன்மைகள் எதுவுமே ஏற்பட்டு விடப் போவதில்லை. மாறாக பின்னடைவுகளே தோன்றலாம்.

அரசியலைப் பொறுத்தவரை இணக்கப்பாடென்பது மிகவும் அவ சியமானது. நாட்டினதும் மக்களினதும் நன்மைக்கானதே அரசி யல் ஆகும். எந்தவொரு நாடும் முன்னேற்றம் பெற வேண்டு மானால் அரசியலில் இணக்கப்பாடு தேவையாகிறது.

கட்சிகள், இனங்கள், மதங்கள், மொழிகள் பிரதேசங்கள் என்ற பேதங்களுக்கு அப்பால் அனைத்துத் தரப்பும் பொது இணக் கப்பாட்டுடன் செயலாற்ற முன்வரும் போது தீர்க்கப்படாத சிக் கல்கள் என்று எதுவுமே இருக்கப்போவதில்லை. அதுமாத்திர மன்றி நாடும் சொர்க்கபுரி போல ஆகி விடுமென்பதில் ஐய மில்லை.

இணக்கப்பாட்டின் அவசியம் குறித்து ஆக்கபூர்வமாகச் சிந்திக்க வேண்டியதொரு காலகட்டத்தில் எமது நாடு தற்போது உள் ளது. நாட்டினதும் மக்களினதும் முன்னேற்றம் கருதி முரண் பாடுகளைக் களைந்து பொதுவான சிந்தனைக்கு வருவதே இன்றைய நிலையில் ஆரோக்கியமானது.

அடுத்தடுத்து இரு தேர்தல்களை நாம் சந்தித்திருக்கிறோம். ஜனா திபதித் தேர்தலிலும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக் கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றி பெற்றிருக்கிறது. ஐக் கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொள்கைத் திட்டங்களை மக்கள் முழுமையாக அங்கீகரித்துள்ளனர். இத்திட்டங்கள் தொட ர்ந்தும் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டுமென்ற உறுதி யான தீர்ப்பை மக்கள் வழங்கியுள்ளனர்.

மக்கள் அளித்துள்ள ஆணையை மனப்பூர்வமாக ஏற்று அதற்கு மதிப்பளிக்கின்ற மனப்பக்குவம் எதிரணிகளுக்கு மிகவும் அவ சியம். இணக்கப்பாட்டு அரசியல் கலாசாரத்தில் இத்தகைய மனப்பக்குவமும் பிரதானம். அதேசமயம் நாட்டை முன்னே ற்றப் பாதையில் கொண்டு செல்வதற்காக அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டிய கட ப்பாடும் எதிரணிகளுக்கு உண்டு.

இது போன்ற போக்குகளுக்கு மாறான விதத்தில் எதிரணிகள் செயற்படுமாக இருந்தால் மக்களது தீர்ப்பை புறக்கணிப்பதா கவே அது அமையும். அதுமட்டுமன்றி நாட்டு நலனில் அக் கறையற்றதொரு போக்கை வெளிப்படுத்துவதாகவும் அமை ந்து விடும். எனவே எதிரணிகள் தங்களுக்குள்ள பொறுப்பை யதார்த்தபூர்வமாக உணர்ந்து கொள்ள முன்வர வேண்டும்.

முப்பது வருட கால பயங்கர யுகத்திலிருந்து எமது நாடு விடு பட்டுள்ளது. மூன்று தசாப்த காலம் யுத்தத்திலேயே கழிந்துள் ளது. வடக்கு கிழக்கு மாத்திரமன்றி நாட்டின் ஏனைய பிரதேச ங்களையும் முழுமையாக அபிவிருத்தி செய்வதற்கு யுத்தம் இடமளிக்கவில்லை. பல்லாயிரம் உயிர்களையும் விலைமதிக்க முடியாத உடைமைகளையும் இழந்து விட்ட நிலைமையில் இன்று நாம் அமைதியான சூழ்நிலையில் நிம்மதியாக வாழ்கி றோம்.

யுத்தம் முடிவடைந்து விட்ட நிலைமையில் இனிமேல் நாம் எதிர் கொள்வது அபிவிருத்தி யுகமாகும். அபிவிருத்தியில் சுமார் முப்பது வருட காலம் எமது நாடு பின்தங்கிப் போயுள்ள தெனலாம். இனிமேல் அபிவிருத்திக்குத் தடையாக எதுவுமே இல்லை. வடக்கு, கிழக்கு உட்பட முழு நாட்டையும் மீளக்கட் டியெழுப்புவதற்கு அரசு பாரிய திட்டங்களை வகுத்துள்ளது. அதேசமயம் இனப்பிரச்சினைக்கு அனைத்து இன மக்களுமே ஏற்றுக்கொள்ளத் தக்கதான தீர்வொன்றைக் காண்பதிலும் அரசு திடமான நிலைப்பாட்டுடன் உள்ளது.

இவையெல்லாம் நாட்டின் எதிர்கால நலனுக்கும் நிரந்தர அமை திக்குமான திட்டங்களாகும். இத்திட்டங்கள் யாவும் முழுமை யாக நிறைவேற வேண்டுமாயின் அரசியல் கட்சிகள் மத்தி யில் பொது இணக்கப்பாடு கடைப்பிடிக்கப்படுவது மிகவும் அவசியம்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் தற்போது பாராளு மன்றத்தில் அதிகூடிய பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டுள் ளது. எனினும் ஏனைய கட்சிகளின் ஒத்துழைப்புக்களையும் பெற்று நலன் தரும் திட்டங்களை முன்னெடுப்பதையே அரசா ங்கம் விரும்புகிறது. இத்தகைய நிலையில் இணக்கப்பாட்டு அர சியல் கலாசாரமொன்று உருவாகுவதே ஆரோக்கியமானதாகும்

Aucun commentaire: