இணக்க அரசியலின் முக்கியத்துவம்
நிபந்தனைகளின் அடிப்படையில் அரசாங்கத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக இருப்பதாகக் கூட்டமைப் பின் தலைவர் இரா. சம்பந்தன் திருமலையிலுள்ள அவ ரது இல்லத்தில் நடத்திய ஊடகவியலாளர் மகாநாடொ ன்றில் கூறியிருக்கின்றார்.
ஐக்கிய இலங்கையில் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் தீர்வைத் தர வேண்டும் என்பதும், இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியேற்றி அவ ர்களின் உடனடிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்பதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிபந்தனைகளாகத் தோன்றுகின்றன.
கூட்டமைப்பின் முடிவும் அது முன்வைத்துள்ள நிபந்த னைகளும் நியாயமானவை. தமிழ் மக்களின் அபிலா ஷைகளையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிபந்த னைகளாக முன்வைத்திருக்கின்றது. இவற்றை எவ்வாறு வென்றெடுக்கலாம் என்பதையிட்டுத் தெளிவான நிலை ப்பாடு தேவை.
இவற்றை அரசாங்கம் செய்து முடித்தால்தான் அரசாங்கத் துடன் ஒத்துழைப்பு என்ற நிலைப்பாட்டைக் கூட்டமை ப்பு எடுக்குமேயானால் அது தமிழ் மக்களின் அபிலா ஷைகளை வென்றெடுப்பதற்கான நிலைப்பாடாக இருக் காது. முதலில் அரசாங்கம் அதன் பொறுப்பை நிறை வேற்ற வேண்டும் என்ற கடந்தகால அனுபவம் துயரகர மான பலனையே தந்தது. இது எதிர்ப்பு அரசியல். இணக்க அரசியலின் மூலமாகவே அரசியல் தீர்வை அடைவதற்கு முயற்சிக்க வேண்டும்.
தமிழ் மக்களின் அபிலாஷையை முழுமையாக நிறைவேற் றக் கூடிய அரசியல் தீர்வை உடனடியாக அடையக் கூடிய சூழ்நிலை இப்போது நிலவுகின்றதா என்பது பற்றிச் சிந்தித்துப் பொருத்தமான அணுகுமுறையைப் பின்பற்றுவதன் மூலமே அரசியல் தீர்வை அடைய முடியும். இதைவிட்டு, சமகால யதார்த்தத்துக்கு முரணான கோரிக்கைகளை முன்வைப்பது முரண்பாட்டை வளர்ப் பதற்கே உதவும். கடந்த காலங்களில் நாம் பெற்ற அனு பவம் இது.
கூடுதலான சமஷ்டித்தன்மை கொண்ட அதிகாரப் பகிர்வை அடைவதற்கான சந்தர்ப்பம் கடந்த காலத்தில் ஏற்பட் டது. அச்சந்தர்ப்பத்தைச் சரியான முறையில் பயன்படு த்தத் தவறியதன் விளைவாக, இன்று அரசியல் தீர் வைப் பொறுத்த வரையில் பின்தங்கிய நிலைக்குத் தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். இதனால் மக்கள் மத்தியில் விரக்தி ஏற்பட்டிருப்பதைக் கடந்த பொதுத் தேர்தல் முடிவு களிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐந்து ஆசனங்களைக் கைப்பற்றிய போதிலும், ஆய்வு ரீதியாக நோக்குமிடத்து அதற்குப் பின்னடைவு ஏற்பட்டி ருப்பதைக் கூட்டமைப்புத் தலைவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அரசியல் தீர்வு முயற்சியைப் பொறுத்தவரை யில் மக்களிடம் ஏற்பட்ட விரக்தியே இதற்குக் காரணம். மக்கள் பலனை எதிர்பார்க்கின்றார்கள். அதை அவர்கள் உணரக்கூடிய நிலையைத் தோற்றுவிப்பது தலைவர்க ளின் பொறுப்பு.
அரசியல் தீர்வுக்கான அதிகாரங்களைப் படிப்படியாக அதி கரித்துக் கொள்ளும் அணுகுமுறையே இன்று பயனளிக்கக் கூடியது. பதின்மூன்றாவது திருத்தத்திலும் பார்க்கக் கூடு தலான அதிகாரங்களைப் பெறுவதற்கான முயற்சியை முதலில் மேற்கொள்ளலாம்.
அத்தீர்வை நடைமுறைப் படுத்துவதன் மூலம் இணக்க சூழ்நிலையொன்றைத் தோற்றுவித்து மேலதிக அதிகாரங்களைக் காலப்போக் கில் பெற முடியும். இந்த அணுகுமுறையின் மூலம் முழுமையான அரசியல் தீர்வைப் பெற முடியும் என்பதோடு, மக்களிடமும் தீர்வொன்று கிடைக்கின்றது என்ற உணர்வு ஏற்படும்.
காலத்துக்கு ஏற்றதும் நடைமுறைச் சாத்தியமானதுமான இந்த அணுகுமுறையைப் பின்பற்றுவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் முன்வருவார் களென நம்புகின்றோம்.
Aucun commentaire:
Enregistrer un commentaire