ஐக்கிய தேசியக் கட்சியின் இன்னொரு முகம்
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தலைதூக்கிய தேசியப்பட் டியல் பிரச்சினை முடிவுக்கு வருவதற்கான அறிகுறி கள் தென்படவில்லை. தலைமைக்கு எதிரான கண்ட னக் கணைகள் குறையவில்லை.
தேசியப் பட்டியல் நிய மனம் மறுக்கப்பட்ட சிரேஷ்ட தலைவர் ருக்மன் சேன நாயக தலைமைக்கு எதிரான போர்க் கொடியைத் தூக்க தொடங்கிவிட்டார். தலைமைப் பதவிக்கு சஜித் பிரேமதா சவே பொருத்தமானவர் என்று அண்மையில் அவர் கூறிய செய்தி பத்திரிகையில் வெளியாகியிருந்தது.
மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணிக்கும் ஐக் கிய தேசியக் கட்சிக்குமிடையே தேசியப் பட்டியல் தொடர் பாகத் தோன்றிய முரண்பாடு இன்னும் தீரவில்லை. பேச்சு வார்த்தை மூலம் சமரச நிலையைத் தோற்றுவிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் மேற்கொண்ட முயற்சி கள் இதுவரையில் தோல்வியிலேயே முடிந்திருக்கின்றன.
மனோ கணேசன் ஐக்கிய தேசியக் கட்சியின் நேச அணி யாகத் தனது அரசியலை ஆரம்பித்தவர். ஏற்றத்திலும் இறக்கத்திலும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் தன்னை நெருக்கமாக இனங்காட்டியவர். சுருக்கமாகக் கூறுவதா னால் ஐக்கிய தேசியக் கட்சிக்காரராகவே மக்கள் அவ ரைப் பார்த்தார்கள்.
ஐக்கிய தேசியக் கட்சித் தலைமைக் கும் அவருக்கும் இடையிலான பிரச்சினை அவர்களின் உட்பிரச்சினையாகத் தோற்றமளித்தாலும், நாட்டின் பிர தான அரசியல் கட்சியொன்றினது தலைமையின் அரசி யல் நேர்மை சம்பந்தப்பட்டிருப்பதால் மக்களின் கவனத் துக்குரிய பிரச்சினையாகின்றது.
ஜனநாயக மக்கள் முன்னணிப் பேச்சாளர்கள் கூறுவதன் அடிப்படையில் பார்த்தால், ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையின் வற்புறுத்தல் காரணமாகவே மனோ கணேசன் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டிருக்கின் றார். கண்டியில் தோல்வியடைந்தால் தேசியப் பட்டியல் நியமனம் வழங்குவதாகவும் அவருக்கு வாக்குறுதி அளி க்கப்பட்டதாகத் தெரிகின்றது.
இந்த வாக்குறுதிக்கு முர ணாகவே ரணில் நடந்திருக்கின்றார். இவற்றைப் பார்க் கும் போது, மனோ கணேசனை ஓரங்கட்ட வேண்டும் என்ற எண்ணத்துடன் ஐக்கிய தேசியக் கட்சித் தலைமை செயற்பட்டிருப்பதாகவே கருத வேண்டியுள்ளது. தோல் வியடைந்த வேட்பாளர்களை நியமிப்பதில்லை என்று ரணில் கூற முடியாது.
தோல்வியடைந்த வேட்பாளரின் மனைவியான அனோமா கமகேயைத் தேசியப் பட்டி யல் மூலம் நியமித்திருக்கின்றார். ஐக்கிய தேசியக் கட்சி சார்ந்த அரசியல் செயற்பாட்டைப் பொறுத்த வரையில், முன்னொருபோதும் கேள்விப்பட்டிருக்காத அனோமா கமகேயிலும் பார்க்க அதி உயர்ந்த இடத்தில் மனோ கணேசன் இருக்கின்றார்.
மனோ கணேசனுக்கு ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் செய்ததை அநீதி என்பதிலும் பார்க்க அரசியல் நயவஞ் சகம் எனக் கூறலாம். அதே வேளை, தவறான கட்சியை தனது அணியாகத் தேர்ந்தெடுத்ததன் பலன் தான் இன்று மனோ கணேசனுக்கு கிடைத்திருக்கின்றது என் பதை குறிப்பிட்டாக வேண்டும்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தமிழர் விரோதப் போக்குக்குப் பல உதாரணங்களை அடுக்கிக் கொண்டு போகலாம். தெற்கா சியாவிலேயே தலைசிறந்ததாக விளங்கிய யாழ்ப்பாண நூலகத்தை எரித்தமை, கறுப்பு ஜூலை இனசங்காரம், அதி காரப் பகிர்வுத் தீர்வுத் திட்டத்துக்குக் காட்டிய எதிர்ப்பு என் பன அவற்றுள் சில. இவை பற்றித் தெரிந்து கொண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படுவத ற்கு மேற்கொண்ட தீர்மானம் மிகவும் தவறானது என் பதை மனோ கணேசன் இப்போது புரிந்து கொண்டிருப் பார் என நம்புகின்றோம்.
சிறுபான்மையினரின் உரிமைகள் மற்றும் அந்தஸ்து தொடர் பாக ஐக்கிய தேசியக் கட்சி எவ்வாறு நடந்து கொள்ளும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
Aucun commentaire:
Enregistrer un commentaire