samedi 24 avril 2010

தீர்வு நடைமுறையை ஆரம்பிக்க பொருத்தமான நேரம்

பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வின் போது சபா நாயகர், பிரதிச் சபாநாயகர், குழுக்களின் பிரதித் தவைர் ஆகிய பதவிகளுக்கான தெரிவு ஏகமனதாக இடம் பெற்றிருப்பது புதிய கலாசாரத்தின் ஆரம்பமாக அமைவதோடு எதிர்காலம் பற்றிய நம்பிக்கையையும் தோற்றுகின்றது என்று நேற்றுக் கூறியிருந்தோம். அரசியல் கட்சித் தலைவர்களும் இதே மாதிரியான அபிப்பிராயத்தையே வெளியிட்டார்கள்.

நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் வகையிலான தகவல் பாரா ளுமன்ற அமர்வுக்கு அடுத்த தினம் கிடைத்தது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடகவியலாளர் மகாநாடு நேற்று முன் தினம் நடைபெற்ற போது தெரிவிக்கப்பட்ட ஒரு விடயத்தையே இங்கு குறிப்பிடுகின்றோம். சார்க் மகாநாட்டுக்குப் பின் சிறுபான் மையினக் கட்சிகளுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணித் தலைவர்களுக்கு அவர் பணிப்புரை விடுத் திருக்கின்றார் என்றும் அங்கு தெரிவிக்கப்பட்டது.

சிறுபான்மையினக் கட்சிகளுடன் ஜனாதிபதி பேசவிருக்கும் விடயம் என்ன என்பதை ஊகிப்பதொன்றும் சிரமமானதல்ல. இன்று ஜனா திபதியினால் தீர்த்து வைக்கப்பட வேண்டிய பிரச்சினையாக எஞ் சியிருப்பது இனப் பிரச்சினை. அபிவிருத்தியைப் பொறுத்தவரை யில் அதிகூடிய அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கின்றது. பின் தங்கியிருந்த பல பிரதேசங்கள் அபிவிருத்தித் திட்டத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. வடமாகாண அபிவிருத்திக்கான விசேட ஏற்பாடாக வடக்கின் வசந்தம் உள்ளது. எனவே சிறுபா ன்மையினக் கட்சிகளுடன் ஜனாதிபதி நடத்தவிருக்கும் பேச்சு வார்த்தை நிச்சயமாக இனப்பிரச்சினையின் தீர்வு பற்றியதாகவே இருக்கும்.

இனப் பிரச்சினையின் தீர்வுக்கு இருந்து வந்த தடை இப்போது நீங் கிவிட்டது. அரசியல் தீர்வுக்குப் புலிகளே தடையாக இருந்து வந்தனர். இப்போது அந்தத் தடை இல்லை. புதிய தடையேதும் இல்லாதிருக்க வேண்டும் என்பதில் அரசியல் கட்சிகள் இப் போது கவனம் செலுத்த வேண்டும். சமகால யதார்த்தத்துக்கு முரணான கோரிக்கைகளைத் தமிழ்த் தரப்பினர் வலியுறுத்துவது மாத்திரமன்றி, அதிகாரப் பகிர்வுக்கு எதிராகச் சிங்களக் கடுங் கோட்பாட்டாளர்கள் தெரிவிக்கும் கருத்துகளும் தீர்வுக்குத் தடை ஏற்படுத்தும் நிலைப்பாடுகளே.

எவ்வாறாயினும், சிறுபான்மையினக் கட்சிகள் தங்கள் நிலைப்பாட் டையிட்டுத் தெளிவாக இருத்தல் வேண்டும். எந்தக் கோரிக்கை யாக இருந்தாலும் பொருத்தமான நேரத்தில் முன்வைக்கப்படும் போது தான் பலனளிக்கும். சமஷ்டிக் கோரிக்கையை முன்வைப் பதற்கோ கூடுதலான அதிகாரங்களைக் கோருவதற்கோ இது பொருத்தமான நேரமல்ல என்பதைத் தமிழ் பேசும் அரசியல் தலைவர்கள் நிச்சயம் புரிந்து கொள்வார்கள். எனவே இன்றைய நிலையில் எது சாத்தியமோ அதற்கான கோரிக்கையைப் பேச்சு வார்த்தையின் போது முன்வைப்பார்களென நம்புகின்றோம்.

இனப் பிரச்சினை ஒரே தடவையில் தீர்க்க முடியாதது என்பதே இன் றைய யதார்த்தம். எனினும் இறுதித் தீர்வுக்கான நடைமுறையை இப்போது ஆரம்பிக்க முடியும். அரசியலமைப்புத் திருத்தத்துக்கு அரசாங்கம் தயாராகுவதும் ஐக்கிய இலங்கையில் தீர்வு காண வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் சம்ப ந்தன் பாராளுமன்றத்தில் பேசியிருப்பதும் ஐக்கிய மக்கள் சுதந் திர முன்னணித் தலைவர்கள் அப்பேச்சை விதந்து பாராட்டியி ருப்பதும் அரசியல் தீர்வு நடைமுறையை ஆரம்பிப்பதற்குச் சாத கமான சூழ்நிலையைத் தோற்றுவிக்கின்றன.

Aucun commentaire: