samedi 24 avril 2010

நம்பிக்கையூட்டும் ஆரம்பம்

பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில் சபா நாயகரும் பிரதிச் சபாநாயகரும் குழுக்க ளின் பிரதித் தலைவரும் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டிருப்பது புதிய கலாசாரத்தின் ஆரம்பமாக அமைவதோடு எதிர்காலம் பற்றிய நம்பிக்கையையும் தோற்றுவிக்கின்றது. சபாநாயகருக்கு வாழ்த்துத் தெரி வித்து ஆற்றிய உரைகளில் கட்சித் தலைவர்களும் இதைக் குறிப்பிட்டுள்ளனர்.

சென்ற தடவை சபாநாயகர் தெரிவின்போது இடம்பெற்ற அமளிதுமளிகள் இன்று வரை அரசியல் நோக்கர்க ளின் மனங்களைவிட்டு அகலவில்லை. இலங்கைப் பாராளுமன்ற வரலாற்றில் இப்போது தான் அமைதி யான முறையில் கருத்தொருமைப்பாட்டுடன் சபாநாய கர் தெரிவு நடைபெற்றிருக்கின்றது. நாட்டின் பிரதான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலும் இக் கருத் தொருமைப்பாடு நிலவ வேண்டும் என்பதே மக்கள் அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.

இந்தப் பாராளுமன்றம் இனப் பிரச்சினைக்கு நீதியான தும் நியாயமானதுமான தீர்வைக் காணுமென்ற நம்பிக் கையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் வெளிப்படுத்தியிருக்கின் றார். பாராளுமன்றத்தில் சபாநாயகருக்கு வாழ்த்துத் தெரி வித்து உரையாற்றுகையிலேயே இந்த நம்பிக்கையை அவர் தெரிவித்தார். இந்த நம்பிக்கை நிறைவேறும் வகை யில் அவரது கட்சியும் செயற்படுமென நம்புகின்றோம்.

நீண்ட காலமாகத் தீர்வின்றியிருக்கும் பிரச்சினையாக இனப் பிரச்சினை உள்ளது. அதேபோல ஏராளமான உயிரிழப்புகளுக்கும் சொத்தழிவுக்கும் காரணமாகவும் இப் பிரச்சினை உள்ளது. இனப் பிரச்சினையின் தீர்வு எவ்வளவு காலத்துக்குப் பின்தள்ளப்படுகின்றதோ அவ்வளவுக்குப் பிரதான இனங்களுக்கிடையிலான இடைவெளி அதிகரித்துக் கொண்டிருக்கும்.

இனப் பிரச்சினை இதுவரை தீராதிருப்பதற்குத் தனியாக எவரையும் பொறுப்பாளியாக்க முடியாது. எல்லோரும் கூட்டுப் பொறுப்பு ஏற்க வேண்டிய விடயம் இது. இனப் பிரச்சினையின் வளர்ச்சிக்குச் சிங்களத் தலைவ ர்களின் தவறுகளும் காரணமாக இருந்திருக்கின்றன. தமிழ்த் தலைவர்களின் தவறுகளும் காரணமாக இருந் திருக்கின்றன. இரு தரப்பினரும் தங்கள் தவறுகளை உணர்ந்து செயற்பட வேண்டிய காலம் இப்போது வந் திருக்கின்றது.

மக்கள் மத்தியில் பரஸ்பர சந்தேகம் வளர்ந்திருப்பது இனப் பிரச்சினை இழுபறி நிலையில் இருப்பதற்கான காரணங்களுள் முக்கியமானது. அரசியல் தீர்வு என்ற போர்வையில் தமிழ்த் தலைவர்கள் பிரிவினைக்கு அடிகோலுகின்றார்கள் என்ற சந்தேகம் தோன்றும் வகை யில் தமிழ்த் தலைமை நடந்திருக்கின்றது. இச் சந்தேக த்தைச் சில சிங்களத் தலைவர்கள் ஊதி வளர்த்திருக் கின்றார்கள். எனவேதான் இரு தரப்பினரும் தவறு களை உணர்ந்து தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் எனக் கூறுகின்றோம்.

மக்களிடம் தோன்றிய சந்தேகம் களையப்படாதிருக்கும் வரை இறுதிக் தீர்வு சாத்தியமில்லை. தீர்வை நோக்கிய விசுவாசமான செயற்பாடுகளுக்கூடாகவே இச் சந் தேக த்தைக் களைய முடியும். நாம் பல தடவைகள் கூறியி ருப்பது போல, உடனடியாகச் சாத்தியமான தீர்வை நடை முறைப்படுத்துவதும் மக்களிடம் தோன்றியுள்ள சந்தே கத்தைப் போக்கும் வகையில் செயற்படுவதும் இறுதித் தீர்வுக்குச் சாதகமான சூழ்நிலையைத் தோற்றுவிக்கக் கூடி யன. இரு தரப்பு அரசியல் வாதிகளும் இவ்விடயத் தில் விட்டுக்கொடுப்புடன் செயற்பட்டாக வேண்டும்.

Aucun commentaire: