mercredi 14 avril 2010



























































































































இணையத்தள வாசகர்களுக்கு எமது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

இன்று காலை விகிர்த்தி புத்தாண்டு மலர்ந்திருக்கின்றது. சித்திரை மாதம் என்றாலே வசந்த காலத் தென்றல் நம்மை இதமாகத் தீண்டிச் செல்வதை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.

தமிழ் மக்களின் சித்திரை மாதப் பிறப்பும் ஆண்டுப் பிறப்பும் ஒன்றே தான். மாதங்களில் சித்திரை சிறந்த மாதமாகக் கொள்ளப்படுகின்றது. இம்மாதத்தில் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.

வருட ஆரம்பம் நன்றாக அமைந்தால் அந்த ஆண்டு முழுவதுமே நற்காரியங்கள் தொடர்ந்து வரும் என்பது தமிழரின் தொட்டு வந்த நம்பிக்கை. இதனையொட்டியே புத்தாண்டு தினத்தில் நற்காரியங்கள் நடத்தப்படுகின்றன. அந்நாள் புனிதமான நாளாகக் கொண்டாடப்படுகின்றது.

பழையன கழிந்து புதியனவற்றோடு மலர்ந்திருக்கும் விகிர்த்தி புத்தாண்டு, நம் நாட்டுக்கு நல்லதொரு விடிவினைப் பெற்றுத் தர வேண்டும். இம்முறை புதிய ஆண்டுடன் தேர்தலின் பின்னரான புதிய ஆட்சியும் அமையப் போகின்றது.

எத்தனையோ உயிர்களைக் காவு கொண்ட கடந்த வருட கசப்பான சம்பவங்கள், மறைந்து, மறக்கப்பட்டு புதிய அத்தியாயத்துடன் காலடி எடுத்து வைக்கப் போகின்றது புதிய ஆட்சி. இனி வரும் காலங்களாவது தமிழரின் வாழ்வில் புத்தொளி பரவ வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திப்போம்.

ஆலயம் சென்று வழிபட்டு இந்நாளை சிறப்பாகக் கொண்டாடும் எமது இணையத்தள வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் நாமும் பெரும் மகிழ்ச்சி அடைகின்றோம்.

Aucun commentaire: