புலிகளின் கனவுகளையும் ஆசைகளையும் நிறைவேற்றுவதற்கு துடிக்கும் பலர் பல நாடுகளிலும் செயற்படுகின்றனர்!
இலங்கையில் ஒழிக்கப்பட்டுள்ள் புலிகளின் கனவுகளையும் ஆசைகளையும் நிறைவேற்றுவதற்கு துடிக்கும் பலர் பல நாடுகளில் இன்னும் செயற்படுவதாக பெற்றோலிய வள அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெறவுள்ள சர்வதேச இந்திய விருது வழங்கும் விழாவை நடத்தும் அந்த அமைப்பின் தலைவரும் நடிகருமான அமிதாப் பச்சனின் வீட்டின் முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தையும் இதன் ஒரு கட்டமாகவே பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். கொழும்பில் மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்வாறு ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் பெரிய நபர்கள் அல்லர் எனவும் இவ்வாறான ஆர்ப்பாட்டங்களினால் இலங்கையில் இடம்பெறவுள்ள அந்த நிகழ்விற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனவும் அவர் கூறினார். ஆர்ப்பாட்டம் போராட்டங்களை யாரும் மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்த அவர் இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுவதன் மூலம் சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தி புலிகளின் கனவுகளை நனவாக்கத் துடிக்கும் பலர் இன்னும் செயற்படுவதை உணர முடிவதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் கப்பம் கோரி கடத்தப்பட்ட இளம் குடும்பஸ்தர் ஈ.பி.டி.பியின் உதவியுடன் பொலிஸாரால் மீட்பு!
வவுனியா வைத்தியசாலைக்கு சென்றபோது கடந்த 24ம் திகதி காலை கடத்தப்பட்ட இளம் குடும்பஸ்தரான 28 வயதுடைய தம்பிராசா ஜெயந்தன் ஈ.பி.டி.பி.யின் உதவுயுடன் வவுனியா பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பணிப்புரைக்கு அமைய மேற்படி குடும்பஸ்தரை கடத்திய நபரை ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் வவுனியாவில் வைத்து பொலிஸாரிடம் பிடித்துக் கொடுத்தனர்.
மேற்படி நபர் ஈ.பி.டி.பி.யின் பெயரை பயன்படுத்தி மேற்படி கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நபர் ஈ.பி.டி.பி. உறுப்பினர் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
கடத்தப்பட்ட நபரின் குடுபத்தினரிடம் இருந்து கப்பம் பெறுவதற்காக இந்நபர் கடத்தப்பட்ட நபரின் வீட்டுக்குச் சென்று பேரம் பேசி உள்ளதாகவும் பேரம் பேசிய தொகையை வவுனியாவில் உள்ள வங்கி ஒன்றுக்குள் வந்து தருமாறு கூறியதாகவும் பின்னர் வவுனியா ஈ.பி.டி.பி. அலுவலகத்திற்கு வந்து தருமாறும் இந்நபர் கூறியுள்ளதாகவும் அறியக் கிடைத்ததை அடுத்து இந்நபரை பிடித்துக் கொடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
mercredi 28 avril 2010
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire