dimanche 18 avril 2010

பொன்னான வாய்ப்பு

பொன்னான வாய்ப்பு


புத்தாண்டு பெரும் நம்பிக்கையோடும் புதிய எதிர்பார் ப்புகளுடனும் பிறந்திருக்கிறது. நடந்து முடிந்த தேர்தல் மூலம் மிகவும் உறுதியான அரசாங்கமொன்றுக்கு மக்கள் ஆணை வழங்கி இருக்கிறார்கள். ஜனாதிபதித் தேர்த லைத் தொடர்ந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு மக்கள் வழ ங்கி இருக்கின்ற மிகப் பெரிய அங்கீகாரம் இது.

நடைமுறையிலுள்ள விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையின் கீழ் அறுதிப் பெரும்பான்மையுடன் அரசாங்க மொன்று அமைக்கப்படவுள்ளதென்பது நமக்கெல்லாம் ஆச்சரியப்படக்கூடிய விடயம்.

ஜனாதிபதித் தேர்தலில் 18 இலட்சத்திற்கு அதிகமான வாக்குக ளால் வெற்றியீட்டிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அரசிய லமைப்பை மாற்றப் போவதாக அறிவித்தார். அதற் கேதுவாக, மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அரசாங் கத்தை அமைப்பதற்கு மக்களிடம் மனந்திறந்து அங்கீகார மும் கோரினார்.

பொதுத் தேர்தல் மூலம், இதற்கு மக்கள் பச்சைக்கொடி காட்டி யிருக்கிறார்கள். கிட்டத்தட்ட மூன்றிலிரண்டு பெரும்பான் மைப் பலம் அரசுக்குக் கிடைத்திருக்கிறது. இதுவரை வெளியான முடிவுகளின்படி, 117 ஆசனங்களை ஐ.ம.சு.மு. பெற்றிருக்கிறது. நாவலப்பிட்டி, கும்புறுப்பிட்டிப் பகுதியில் ஏற்பட்ட தேர்தல் வன்முறைகள், குளறுபடிகளால் மீள் வாக்குப் பதிவுக்கு தேர்தல்கள் ஆணையாளர் உத்தர விட்டார். அதற்கமைய, மீள்வாக்குப் பதிவு நாளை இடம் பெறுகிறது. 21ம் திகதி சகல தொகுதிகளுக்குமான தேர்தல் முடிவுகள் வெளியிடப்படவுள்ளன. இதில், ஐ.ம.சு. மு. 144 அல்லது 145 ஆசனங்களைக் கைப்பற்றுமென்பது உறுதி யாகிவிட்டது. (உத்தியோகப்பற்றற்ற முடிவுகளின்படி)

எப்படியும் 2/3 பெரும்பான்மையை பாராளுமன்றத்தில் இலக் காகப் பெற முடியுமென அரசாங்கம் உறுதிப்பாட்டுடன் இருக்கிறது. 2/3 என்பது 150 ஆசனங்களைக் கொண்டதாக அமையவேண்டும்.

இதேவேளை, இந்த ஆண்டு இறுதிக்குள் அரசியலமைப்பை மாற்றுவதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. நாட்டின் அபிவிருத்திக்கும் சுபீட்சத்துக்கும் இடையூறாக இருக்கின்ற சில தடைகள் அகற்றப்பட்டு, புதிய எதிர்கால இலக்கோடு அரசி யலமைப்பு திருத்தப்படவேண்டுமென்பதே அரசின் விருப்பம்.

உண்மையில், நடைமுறையிலுள்ள நாட்டிற்கு ஒவ்வாத தேர்தல் முறையை மாற்றி அமைக்க வேண்டியது முக்கிய கடமையாகிவிட்டது. விகிதாசாரத் தேர்தல் முறையை மாற்ற வேண்டுமென்பதில் எந்தவொரு கட்சிக்கும் மாற்றுக்கருத்து இல்லை.

நாட்டில் வன்முறைகளும், மக்கள் மத்தியில் வன்மமும் ஏற்ப டுவதற்கு இந்தத் தேர்தல் முறையே காரணமாகும். போட்டி யிடும் ஒரே கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களே மோதலில் ஈடுபடுமளவுக்கு மோசமான தேர்தல் முறையாக இது இருக் கின்றது.

முழுக்க முழுக்க ஐ. தே. க. வின் நலன்சார்ந்து 1978ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்தனவினால் அறி முகப்படுத்தப்பட்ட இந்த தேர்தல் முறை, பாராளுமன்ற கலா சாரத்தை சீரழித்ததோடு, வன்முறையைத் தோற்றுவித்த தென்பதே உண்மை. இதை விட, அது எதனையும் சாதிக்க வில்லை.

மாவட்ட ரீதியில் பிரதிநிதி தெரிவு செய்யப்படுவதால், தங்களது தொகுதிக்கு ஒரு பிரதிநிதி இல்லையென்ற ஆவேசமும் அங்கலாய்ப்பும், மக்கள் மத்தியில் ஏற்பட்டு, நொந்து போய் இருக்கின்றார்கள். இதனால் தேர்தலில் வாக்களிப்பதைக் கூட மக்கள் வெறுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள் என்பதற்கு நடந்து முடிந்த தேர்தல்கள் சான்று பகர்கின்றன.

ஆகவே, நம் நாட்டிற்குத் தேவையான நடைமுறையோடு கூடிய தேர்தல் முறை மாற்றம் ஒன்றை ஏற்படுத்தியே ஆக வேண்டும். இந்த மாற்றம் தொகுதி வாரியாகவும் இருக்க லாம். அல்லது தேசியப்பட்டியல் மூலம் தெரிவாவோரை தொகுதி அடிப்படையில் தெரிவு செய்யக்கூடிய முறையாக வும் அமையலாம். சகல கட்சிகளின் சம்மதத்தோடு மாற்றம் இடம்பெறுவதே ஏற்புடையது.

இந்த வகையில், எதிர்வரும் 22ம் திகதி புதிய பாராளுமன்றம் கூடுகிறது. புதிய உறுப்பினர்கள் எதிர்கால சந்ததியைக் கருத்தில் கொண்டு, பொறுப்புடன் செயற்பட வேண்டியவர் களாக இருக்கின்றனர். வக்கிரத்தன்மையை விட்டுவிட்டு, சகல உறுப்பினர்களும் நாட்டைக் கட்டியெழுப்பும் அரசின் பணியில் கைகோர்த்து செயற்பட முன்வர வேண்டும்.

நாட்டினதும் நாட்டு மக்களினதும் நன்மை கருதி சகல உறுப் பினர்களும் ஒன்றுபட்டுச் செயற்படுவதற்கான பொன்னான காலம் மலர்ந்திருக்கிறது. குறுகிய கட்சி அரசியல்களைக் கைவிட்டு தேசிய நலன்கருதிச் செயற்படுவதற்கு புதிய பாராளுமன்றம் வாய்ப்பாக அமையும்.

Aucun commentaire: