mardi 27 avril 2010

உலக்கை தேய்ந்த கதையாக ஐக்கிய தேசியக் கட்சி

ஐக்கிய தேசியக் கட்சியில் பாரிய மாற்றங்கள் ஏற்படப் போவதாகவும் கட்சி முழுமையாகப் புனரமைக் கப்படும் என்றும் காலி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பேச்சாளருமான கயந்த கருணா திலக கூறுகின்றார். பாராளுமன்ற உறுப்பினர்களுக்குப் புதிய பொறுப்புகள் வழங்கப்படும் என்றும் அவர் சொல் கின்றார். இடம்பெறப்போகும் மாற்றங்களுள் தலைமை மாற்றமும் அடங்கலாம் என்று சில ஊடகங்கள் எதிர்வு கூறுகின்றன.

இலங்கை அரசியல் வரலாற்றில் இன்றைய ஐக்கிய தேசியக் கட்சித் தலைமை தோல்வியைப் பொறுத்த வரையில் சாதனை படைத்திருக்கின்றது. ரணில் விக்கிரமசிங்ஹ தலைமைப் பொறுப்பை ஏற்ற பின் ஒரு தேர்தலைத் தவிர மற்றைய எல்லாத் தேர்தல்களிலும் கட்சி தோல்வியையே சந்தித் திருக்கின்றது.

ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல், மாகாண சபை தேர்தல், உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் என எல்லாத் தேர்தல்களிலும் ரணிலின் தலை மைக்கு அடுத்தடுத்துத் தோல்வியே ஏற்பட்டிருக்கின்றது. வெற்றியீட்டிய ஒரேயொரு தேர்தலில் கூட ஐக்கிய தேசி யக் கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உதவியுடனேயே ஆட்சி அமைத்தது.

இந்த நிலையில் கட்சித் தலைமை மாற வேண்டும் என்ற கோரிக்கை கட்சிக்குள் எழுவது இயல்பானதே. இந்தக் கோரிக்கை நீண்ட காலமாகக் கட்சி உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டு வருகின்றது. இக்கோரிக்கையை வலி யுறுத்திய சில சிரேஷ்ட தலைவர்கள் அதைச் சாதிக்க முடி யாததால் கட்சியிலிருந்து வெளியேறி அரசாங்கத்துடன் இணைந்தார்கள்.

கட்சியின் இன்றைய யாப்பு தலைமை மாற்றத்துக்கு இடமளிப்பதாக இல்லை. தலைவர் தானாக விலக வேண்டுமேயொழிய அவரை யாரும் விலக்க முடியாது. எனவே, ஐக்கிய தேசியக் கட்சியில் ஆக்கபூர் வமான புனரமைப்பு இடம்பெற வேண்டுமானால் யாப்பு மாற்றப்பட வேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சியின் புனரமைப்பு வெறுமனே உட்கட்சி விவகாரமல்ல. ஜனநாயக பெறுமானமும் இதில் சம்பந்தப் பட்டுள்ளது. கீரைக் கடைக்கும் எதிர்க் கடை வேண்டும் என்பது போல, ஜனநாயகம் செழித்து வளர்வதற்குப் பல மான எதிர்க்கட்சி அவசியம். உலக்கை தேய்ந்த கதையாக ஐக்கிய தேசியக் கட்சி தேய்ந்து செல்வது ஜனநாயகத் தின் பெறுமானத்தைப் பேணுவதற்கு உகந்ததல்ல.

ஐக்கிய தேசியக் கட்சி இலங்கையின் மூன்றாவது பழம் பெருங் கட்சி. ஆறு தடவைகள் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற கட்சி. இன்று பலமான எதிர்க்கட்சியாக இருப்பதற்கும் இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது.

கட்சித் தலைமையை மாற்றுவதும் வேறு புனரமைப்புகளைச் செய்வதும் மாத்திரம் கட்சியின் செல்வாக்கு வளர்வதற் குக் காரணமாகப் போவதில்லை. கொள்கை ரீதியான மாற்றமும் தேவை. எதிர்க்கட்சி என்றால் எல்லாவற்றை யும் எதிர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சியின் இன்றைய தலைமை செயற்பட்டு வந்திருக்கின்றது.

ஜனநாயக விரோதமான விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையை மாற்றுவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் முயற்சி மேற்கொண்ட போது ஐக்கிய தேசியக் கட்சி அதற்கு ஆதரவளிக்க வில்லை. இனப் பிரச்சினையின் தீர்வு தொடர்பாக ஆராய் வதற்காக நியமிக்கப்பட்ட சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு வுக்கு ஐக்கிய தேசியக் கட்சி ஒத்துழைப்பு நல்கவில்லை.

இனப் பிரச்சினை பற்றி அடிக்கடி பேசுகின்ற போதிலும் தீர்வுக்கு எதிராகவே ஐக்கிய தேசியக் கட்சியின் இன் றைய தலைமை செயற்பட்டு வந்திருக்கின்றது.

உட்கட்சிப் புனரமைப்பு எவ்வளவு முக்கியமோ அதே அளவுக் குத் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளில் அனுகூல நிலைப்பாடும் முக்கியம் என்பதை ஐக்கிய தேசியக் கட்சி முக் கியஸ்தர்கள் புரிந்து கொள்வார்களென நம்புகின்றோம்.

Aucun commentaire: